தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன் (National Pulses Research Centre, Vamban) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் வம்பன் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் பட்டுக்கோட்டை சாலையில் வம்பன் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மையம் 123.46 எக்க்டர் பரப்பளவு கொண்டது. 79.47 எக்டர் மரம் சார்ந்த வகையாகவும் 2.27 எக்டர் ஆண்டுப்பயிர் வேளாண்மையாகவும் 6.68 எக்டர் சாலையாகவும் 4.04, எக்டர் கட்டிடமாகவும் இப்பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 37.8 செல்சியசும்; குறைந்த அளவு 20.7 செல்சியசும் ஆகும். ஆண்டு மழையளவு 881 மில்லி மீட்டராக உள்ளது.

வரலாறு[தொகு]

தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 1979ஆம் ஆண்டு வம்பனில் தொடங்கப்பட்டது. இது தமிழகத்தின் முதன்மையான பயறுவகை ஆராய்ச்சி மையம் ஆகும். அகில இந்திய அளவில் பயறுவகை ஆராய்ச்சி திட்டம் ஒன்று என இந்திய ஒருங்கிணைப்பு வேளாண்மை ஆராய்ச்சி மையக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது. தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன் பயறுவகைப் பயிர்களில் பல உளுந்து இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.[2]

செயல்பாடுகள்[தொகு]

  • நோய் தாக்குதலின்றி அதிக மகசூல் தரும் பயறுவகைகள் கண்டறிதல்
  • இயற்கை மற்றும் தொழில்நுட்ப வழியாக பயறுவகைகள் வகைகளை மேம்படுத்துதல்
  • புதிய வகை பயறுகளை கண்டுபிடித்தல் (13 வகையான பயறுவகைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது)
  • பயிர் வேளாண்மைக்கு தொழில் நுட்ப உதவிகள்-சார்ந்த உரங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
  • விதைகள் பதப்படுத்தும் தொழில் பயிற்சி மையம்
  • பழங்கள் உற்பத்தி
  • பயறுவகை ஆராய்ச்சி
  • மண் பரிசோதனை

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Pulses Research Centre Pudukkottai". www.indiascienceandtechnology.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  2. "உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, துவரை... பயறு வகைகளின் பிதாமகன் வம்பன் ஆராய்ச்சி நிலையம்!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/agriculture/government/national-pulses-research-station-varieties. பார்த்த நாள்: 31 December 2022.