தேசிய பசுமைப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய பசுமைப்படை இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும்.[1] இது பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பில் 1,20,000 பள்ளிகளை உள்ளடக்கியுள்ளது.[2]

வரலாறு[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டில் 1998ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் மூன்று மாவட்டங்களில் 170 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளில் சூழல் மன்றங்கள் துவங்கப்பட்டு அதன் பின்னர் மாவட்டந்தோறும் 40 பள்ளிகள் வீதம் 1200 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேசிய பசுமைப்படை என்னும் திட்டத்தினை 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தி தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் 8000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சூழல் மன்றங்கள் நிறுவப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_பசுமைப்படை&oldid=2782265" இலிருந்து மீள்விக்கப்பட்டது