தேசிய நெல் தினம்
தேசிய நெல் தினம் | |
---|---|
![]() | |
கடைப்பிடிப்போர் | நேபாளம் |
வகை | தேசியம் |
நாள் | 29 சூன் (15 அசார்) |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தேசிய நெல் தினம் (National Paddy Day; Nepali: राष्ट्रीय धानरोपाई दिवस, romanized: Rastriya Dhanropai Diwas) என்பது நேபாளத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது நெல் நடவு பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆஷாத் மாதம் 15ஆம் தேதி (சூன் 29) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு ரோபைன் திவாசு, தன் திவாசு, ஆசாத் பாண்ட்ரா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.[1][2] விவசாயிகள் அரிசி, பயறு, காய்கறிகள் போன்ற பொருட்களை நடவு செய்து இது கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா வழக்கமாக மக்கள் தங்கள் கிராமத்தில் அணிவகுத்துச் சென்று நெல் வயல்களுக்குள் நுழைவதோடு தொடங்குகிறது.[1] மக்கள் நேபாளப் பாரம்பரிய உடைகளை அணிவார்கள்.[1] இணைய கபரின் கூற்றுப்படி, "குறிப்பிட்ட பொறுப்புகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆண்கள் வயலை உழுது, வடிகால் தண்ணீரை ஏற்பாடு செய்து, வயல்களைச் சமன் செய்து, தோட்டத்திற்கு மெல்லிய சேறு குழம்பு தயாரிக்கிறார்கள்".[1] மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரைத் தூவி, சேற்றில் விளையாடுகிறார்கள், நெல் நாற்றுகளை நடுகிறார்கள், பாரம்பரிய உணவான தயிர், அவலுடன் தயாரித்த உணவைச் சாப்பிடுகிறார்கள், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறார்கள்.[3] சில சமூகங்கள் தொடர்புடைய கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.[4]
நேபாளத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் இந்த விழா பிரபலமாக உள்ளது. எனவே இந்த விழா வேளாண் சுற்றுலாவின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.[1]
வரலாறும் முக்கியத்துவம்
[தொகு]கலாச்சார விதிமுறைப்படி, 15 ஆஷாத் அந்த "ஆண்டுக்கான நெல் நடவு தொடங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது". [5] இந்தத் தேதி பருவமழைக் காலத்தில் வருகிறது. இது நெல் நடவு செய்வதற்கு உகந்த நேரமாகும்.[6] திசம்பர் 14, 2004 அன்று, நேபாள அரசு ஆஷாத் 15 ஆம் தேதியைத் தேசிய நெல் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.[5] "தன்னிறைவு மற்றும் செழிப்புக்காக நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்" என்ற கருப்பொருளின் கீழ் இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.[7]
கர்னாலி மாகாண சட்டமன்றம், சூம்லா மாவட்டத்தைத் தவிர, கர்ணாலி மாகாணத்தில் ஆஷாத் 15-ஐ பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஜும்லாவில் நெல் நடவு மார்ச் 25 அன்று தொடங்குகிறது.[8]
நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரிசி சுமார் 7 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது.[9] 2018ஆம் ஆண்டில், நேபாளம் சுமார் ரூ.25 பில்லியன் பில்லியன் மதிப்புள்ள அரிசி இறக்குமதி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[10]
உணவுகள்
[தொகு]
தேசிய நெல் தினத்தன்று பாரம்பரியமாகத் தயிர் மற்றும் அவல் உட்கொள்ளப்படுகிறது.[11] இதனுடன் தயிரும் பரிமாறப்படுகிறது.[12]
முக்கிய முன்னேற்றங்கள்
[தொகு]2020-ஆம் ஆண்டு தி ஹிமாலயன் டைம்ஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், நேபாளத்தின் பல தொலைதூரப் பகுதிகளில், குழந்தைகள் இந்த விழாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] 2020-ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய், வெட்டுக்கிளி தொல்லை குறித்த பயம் காரணமாகத் திருவிழா கொண்டாட்டம் பழகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Asar 15: Nepali farmers hope for prosperity amid fears of Covid-19, locust attack". OnlineKhabar (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 29 June 2020.
- ↑ Pandey, Pradyumna Raj; Pandey, Hemprabha (2013). "Socio-Economic Development Through Agro- Tourism: A Case Study of Bhaktapur, Nepal". Journal of Agriculture and Environment 12: 59–66. doi:10.3126/aej.v12i0.7564.
- ↑ 3.0 3.1 "National Paddy Day". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 27 June 2016. Retrieved 29 June 2020.
- ↑ "National Paddy Day marked with various events". The Rising Nepal. 30 June 2020. Retrieved 23 July 2020.
- ↑ 5.0 5.1 "Rice varietal mapping" (PDF). Crop Development Directorate. Retrieved 29 June 2020.
- ↑ Bhattarai, Krishna P. (2009). Nepal. Infobase Publishing. ISBN 9781438105239.
- ↑ "PM hopeful of mitigating COVID-19 impact on national economy by boosting up paddy production". Khabarhub (in ஆங்கிலம்). 29 June 2020. Retrieved 29 June 2020.
- ↑ "Public holiday announced in nine districts in Karnali Province on June 29". My Republica (in ஆங்கிலம்). Retrieved 29 June 2020.
- ↑ Deupala, Monika. "Nepal celebrates paddy planting day". Nepali Times (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 29 June 2020.
- ↑ "Will celebrations lead to higher paddy output?". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 30 June 2018. Retrieved 29 June 2020.
- ↑ Agence France-Presse (30 June 2020). "Playing and planting: Nepal celebrates paddy day". France 24. Retrieved 23 July 2020.
- ↑ "National Paddy Day celebrations in photos". kathmandupost.com (in English). Retrieved 29 June 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)