தேசிய நெடுஞ்சாலை 320ஈ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 320ஈ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 20 | ||||
நீளம்: | 133.8 km (83.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | சக்ரதர்பூர் | |||
மேற்கு முடிவு: | ராவுர்கேலா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு, ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 320ஈ, (National Highway 320D (India)) பொதுவாக தே. நெ. 320ஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 320ஈ இந்தியாவின் சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 320ஈ, சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்களில் உள்ள சக்ரதார்பூர், சோனுவா, கோயல்கேரா, மனோகர்பூர், ஜரைகேலா, ராவுர்கேலா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 20 சக்ரதார்பூர் அருகே முனையம்[1]
தே.நெ. 320G மனோகர்பூர் அருகே
தே.நெ. 143 ரூர்கேலா அருகே முனையம்[1]
எதிர்காலத் திட்டம்
[தொகு]சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை 320ஈ மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இத்திட்டத்திற்காக ரூபாய் 1 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் டாட்டா நகரை சக்ரதர்பூர், சோனுவா, கோல்கேரா, கைடா, பார்போஷ், மனோகர்பூர், பிஸ்ரா, பொண்டமுண்டா வழியாக ராவுர்கேலாவுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, சினி, ராஜ்கர்சவான், பாராபம்போ வழியாக தேசிய நெடுஞ்சாலை 43-ஐ தேசிய நெடுஞ்சாலை 20-உடன் இணைக்கும் வகையில் போலாதியிலிருந்து சக்ரதார்பூர் வரை சாலை அமைக்கப்படும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் இந்த திட்டத்திற்கு இடையூறாக உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 24 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 24 March 2019.