தேசிய நீதித்துறை அகாதமி (இந்தியா)
| நிறுவனத்தின் மேலோட்டப் பார்வை | |
|---|---|
| நிறுவிய ஆண்டு | 1993 |
| வகை | சுயாட்சியுடன் கூடிய பதிவு செய்யப்பட்ட சங்கம் |
| சட்டப்பூர்வ நிலை | சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860 |
| இயக்குநர் | முன்னாள் நீதியரசர் அனிருத்த போஸ் |
| தலைவர் | இந்தியத் தலைமை நீதிபதி |
| அமைவிடம் | போபால் புறநகர், மத்தியப் பிரதேசம் |
| நாடு | |
| வளாகம் | 63 ஏக்கர் |
| நிதியுதவி | இந்திய அரசு |
| கல்வித் திட்டம் | தேசிய நீதித்துறை கல்வி உத்தி |
| பயன்பாடு | நீதிபதிகளுக்கான பயிற்சி |
| ஆசிரியர் குழு | 17 |
| இணையதளம் | www.nja.gov.in |
தேசிய நீதித்துறை அகாதமி (National Judicial Academy) நீதித்துறை நீதிபதிகளுக்கு பயன்பாட்டுச் சட்டக் கல்வி மற்றும் பயிற்சி வழங்க 1993ஆம் ஆண்டில் போபால் புறநகரத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் இந்திய உச்ச நீதிமன்றம் நிறுவிய அமைப்பாகும்.
சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ், 1993ஆம் ஆண்டில் இந்த அகாதமி ஒரு சங்கமாகப் பதிவுசெய்யப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழுவால் இந்த அகாதமி நிர்வகிக்கப்படுகிறது. நிர்வாகக் குழுவில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகள் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூன்று செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அகாதமியின் ஆசிரியர் குழுவில் ஒரு இயக்குநர் தலைமையில் 16 பேர் செயல்படுவார்.
அகாதமியின் நோக்கங்கள்
[தொகு]- நீதிமன்ற மேலாண்மை மற்றும் நீதி நிர்வாகம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் சிறந்து விளங்கும் மையத்தை நிறுவுதல் மற்றும் நீதித்துறை அமைப்பில் மேம்பாடுகளை பரிந்துரைத்தல்.
- நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களின் நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்ச்சியான சட்டக் கல்வியை வழங்குதல்.
- நீதித்துறை நிர்வாகம் தொடர்பான தகவல்களைப் பரப்புதல், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், தனிக்கட்டுரைகள், பத்திரிகைகள் போன்றவற்றை வெளியிடுதல் மற்றும் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பிற நீதித்துறை நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்.
செயல்பாடுகள்
[தொகு]நீதித்துறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு மூலம் நீதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த இலக்குகளை அடைவதற்கும் முக்கிய முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், அகாதமி பின்வருவனவற்றைச் செய்யப்பாடுகிறது.
- நீதி நிர்வாகத்தில் தேசிய முன்னுரிமைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் நீதி நிர்வாகத்தில் உள்ள பிற பங்குதாரர்களுக்கு நீதித்துறை கல்வி மற்றும் பயிற்சியை வழங்குதல்.[1]
- நீதி நிர்வாகம் மற்றும் நீதிமன்ற மேலாண்மை குறித்த ஆய்வுகள்/ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேம்பாடுகளை பரிந்துரைத்தல்.
- நீதி நிர்வாகம் மற்றும் நீதிமன்ற மேலாண்மை குறித்த அறிவை உருவாக்குதல் மற்றும் பரப்புதல்.
- நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களிடையே தொழில்முறை திறன் மற்றும் நடைமுறையின் மிக உயர்ந்த தரத்தை ஊக்குவித்தல்.
- நீதியை நிலைநாட்டுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், விரைவான நீதி வழங்கல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், நீதிமன்ற அமைப்புகளின் செயல்பாட்டுக்கு அளவீடு செய்யப்பட்ட அதிநவீன தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்.
- இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நீதித்துறை கல்வி, பயிற்சி மற்றும் நீதி அறிவியல் அறிவு ஆகியவற்றில் தேசிய நீதித்துறை அகாதமியை உலகத் தரம் வாய்ந்த மையமாக மாற்றுதல்.
அன்றாட நிர்வாகம்
[தொகு]தேசிய நீதித்துறை அகாதமியின் அன்றாட நிர்வாகத்தை மேற்பார்வையிட 1 இயக்குநர் தலைமையில் 1 கூடுதல் இயக்குநர் (ஆராய்ச்சி), 3 பேராசிரியர்கள், 6 உதவிப் பேரராசிரியர்கள், 6 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் செயல்படுவர்.