தேசிய நாடகப் பள்ளி, திரிபுரா
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | நவம்பர் 17, 2011 |
சார்பு | சங்கீத நாடக அகாதமி |
பணிப்பாளர் | விஜய்குமார் சிங் |
அமைவிடம் | அகர்தலா, திரிபுரா. , , 799007 |
இணையதளம் | tripura |
தேசிய நாடகப் பள்ளி, திரிபுரா (National School of Drama, Tripura) என்பது புது தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியின் ஒரு முகாம் அலுவலகம் ஆகும். அகர்தலாவில், திரிபுரா அரசாங்கத்தின் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்கள் மற்றும் உயர்கல்வித் துறையுடன் இணைந்து திரிபுராவின் தேசிய நாடகப் பள்ளியின் கல்விப் பிரிவான இப்பள்ளி 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று நிறுவியது. [1] இந்த பிரிவு வடகிழக்கு, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கல்வியில்-நாடகம் என்ற ஒரு வருட குடியிருப்பு முதுநிலை சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. [2] [3] [4]
பாடநெறி
[தொகு]தேசிய நாடகப் பள்ளி, திரிபுராவில் இந்தியாவில் இருந்து வரும் மாணவர்களை கல்வியில்-நாடகம் என்ர ஒரு வருட குடியிருப்பு சான்றிதழ் படிப்புக்கு மட்டுமே மாணவர்களை ஏற்றுக்கொள்கிறது. பள்ளிகளுக்கு நாடக ஆசிரியர்களையும், கல்வியில்-நாடகத்தின் செயல்பாடுகளுக்கான கலைஞர்களையும், இத்துறையை முறைமையைப் பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க கல்வியில் நாடகத்திறன் வள நபர்களையும் தயார்படுத்துவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National School of Drama | (Theatre-in-Education Wing) Tripura" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-11.
- ↑ "TIE Wings Tripura" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-11.
- ↑ "Three-week workshop on drama concludes - Eastern Mirror". easternmirrornagaland.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-06-25. Retrieved 2022-09-11.
- ↑ "Rajeshwari Karuna School conducts drama workshop". MorungExpress. Retrieved 2022-09-11.