தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், சென்னை
முதன்மை கட்டிடம் | |
Other name | NITTTRc |
|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்குதல் |
| வகை | நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | 1964 |
| நிதிநிலை | ₹40 கோடி (ஐஅ$4.7 மில்லியன்) (2021–2022) |
| தலைவர் | பேராசிரியர். வி. எஸ். எஸ். குமார் |
| பணிப்பாளர் | உஷா நடேசன்[1] |
கல்வி பணியாளர் | 27 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 34 |
| 24 | |
| அமைவிடம் | , 600113 , 12°59′14″N 80°14′59″E / 12.9873°N 80.2498°E |
| வளாகம் | நகர்புறம் 25 ஏக்கர்கள் (0.10 km2) |
| இணையதளம் | www |
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், சென்னை (National Institute of Technical Teachers' Training and Research, Chennai) (சுருக்கமாக:NITTTR), இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான மத்திய அரசின் பயிற்சி நிறுவனம் ஆகும். இது சென்னை பெருநகரத்தின் தரமணியில் 1964ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.[2]
விரிவாக்க மையங்கள்
[தொகு]சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம் கீழ்கண்ட 4 நகரங்களில் விரிவாக்க மையங்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு மையமும் நன்கு நவீன வசதிகளுடன், அகில இந்தியா அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்களுக்கு பணியிடைப் பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
துறைகள் & மையங்கள்
[தொகு]சென்னை தரமணியில் செயல்படும் இத்தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் 9 துறைகளையும், 3 மையங்களையும் கொண்டுள்ளது.
- கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை
- கணித அறிவியல் பொறியியல் துறை
- தொழில்நுட்பப் பாடத்திட்ட மேம்பாட்டுத் துறை
- உலோகம் மற்றும் தொழில்நுட்பத் துறை
- மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை
- கல்வியியல் துறை
- இயந்திர பொறியியல் துறை
- கிராமப்புற மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை
- கல்வி ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம்
- சர்வதேச விவகார மையம்
- வள மையம்
தேசிய அளவிலான பயிற்சித் திட்டங்கள்
[தொகு]இந்நிறுவனம் தொழில்நுட்ப ஆசியர்களுக்கு கற்பித்தல், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கற்றல், திறன் சார்ந்த, தொழில்துறை ஆதரவு மற்றும் பிற பொறியியல் துறைகள் தொடர்பான துறைகளில் கிட்டத்தட்ட 250 ஆசிரிய மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. 2022 இந்நிறுவனம் தொழில்முறை மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிறுவனம் சராசரியாக ஆண்டுக்கு 7,500 தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. மேலும் இந்நிறுவனம் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசின் தொழில்துறை அதிகாரிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி திட்டங்களையும் வழங்கி வருகிறது.
முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் ஆய்வுப் பட்டங்கள்
[தொகு]2024ஆம் ஆண்டில் இந்நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றுள்ளது. இது பல்வேறு பொறியியல் துறைகளில் ஏழு முதுகலை பட்டப்படிப்புகளையும், வணிக பகுப்பாய்வுல் முதுநிலை வணிக மேலாண்மை பட்டத்தையும் வழங்குகிறது. மேலும் இது பொறியியல், பொறியியல் கல்வி மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் மூன்று முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anna University professor appointed director of NITTTR". The Hindu. 28 June 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/anna-university-professor-appointed-director-of-nitttr/article35012634.ece.
- ↑ Chennai, NITTTR (31 July 2019). "NITTTR Chennai". nitttrc.ac.in. Retrieved 31 July 2019.