உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம்
National Centre for Polar and Ocean Research
சுருக்கம்NCPOR
உருவாக்கம்25 மே 1998; 28 ஆண்டுகள் முன்னர் (1998-05-25)
தலைமையகம்வாஸ்கோட காமா, கோவா
ஆள்கூறுகள்15°23′49″N 73°47′35″E / 15.397°N 73.793°E / 15.397; 73.793
சேவை பகுதி
இந்தியா
தலைவர் எம். ரவிச்சந்திரன்
எம். ரவிச்சந்திரன்[1][2]
மைய அமைப்பு
ஆட்சிமன்றக் குழு
வரவு செலவு திட்டம்
1,897 கோடி (ஐஅ$220 மில்லியன்) (2021 - 2022) [3]
வலைத்தளம்Official website

தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் ( National Centre for Polar and Ocean Research) என்பது கோவாவின் வாசுகோடகாமாவில் அமைந்துள்ள ஓர் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.[4]

வரலாறு

[தொகு]

இது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.[5] இது இந்தியவின் அண்டார்டிக் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் இந்திய அரசின் அண்டார்டிக் நிலையங்களான பாரதி மற்றும் மைத்ரியைப் பராமரிக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது.[6] முதலில் 25.மே.1988 அன்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையமாக நிறுவப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் அராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றப்பட்டது. பிரேம் சந்த் பாண்டே நிறுவன இயக்குநராக இருந்தார்.[7][8][9][2][10] தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிமையம் உலகளாவிய சோதனைகளில் பங்கேற்பதற்கும், சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கும், அண்டார்டிக் ஆராய்ச்சியுடன் தொடர்புடைய சர்வதேச குழுக்களின் தலைமைக்கும் பெயர் பெற்றது. தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் தற்போதையத் தலைவர் எம். இரவிச்சந்திரன் ஆவார். இவர் 2021 முதல் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளராகவும் உள்ளார். இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தம்பன் மெலேத் ஆவார்.[11]

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், குறைந்த வெப்பநிலை ஆய்வகத்தை கொண்டுள்ளது. ஒரு தேசிய அண்டார்டிக் தரவு மையத்தினையும் துருவ அருங்காட்சியகத்தையும் இங்கு அமைத்து வருகிறது.

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் பணிகள்

[தொகு]
  • அண்டார்டிக்கா மற்றும் இமயமலையிலிருந்து பனிக்கட்டி மாதிரிகளை சேமித்தல்.
  • நார்வே நாட்டின் சுவால்பார்டில் உள்ள இமாட்ரி மற்றும் இந்தார்த் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையங்களை இயக்குதல்.[12] [13]
  • இந்தியாவின் கடல்சார் ஆய்வுக் கப்பல்களின் முதன்மையான கடல்சார் ஆராய்ச்சக் கப்பலான ஓ. ஆர். வி. சாகர் கன்யாவை நிர்வகிப்பது. இந்தக் கப்பல் அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பற்றிய இந்தியாவின் ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
  • இது அலகாபாத் பல்கலைக்கழகத்தின் கே. பானர்ஜி வளிமண்டல மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் மையத்தின் நிறுவியதின் ஆரம்ப கட்டத்திலிருந்து இறுதி கட்டம் வரை, பல்கலைக்கழகத்துடன் கூட்டுப் பணியாற்றி இத்திட்டத்தை முழுமையடையச் செய்தது.

இந்த மையம் முன்னர் அண்டார்டிக் ஆய்வு மையம் என்று அழைக்கப்பட்டது. இது 12 மே1997 அன்று பி. சி. பாண்டே இயக்குநராக இணைந்ததன் மூலம் நடைமுறைக்கு வந்நது.[14] அக்டோபர் 9, 2016 அன்று துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையமானது இமயமலையில் ஹிமான்ஷ் என்ற உயரமான இடத்தில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியது.[15] [16] இந்த நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டியில் 13000 அடி (4000மீ) உயரத்தில் அமைத்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "भारत 'तिथे' काय करतो?" (in mr-IN). Lokmat. 7 February 2021 இம் மூலத்தில் இருந்து 12 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210412195525/https://www.lokmat.com/manthan/what-does-india-do-antarctica-a296/.
  2. 1 2 "Our Chairman". NCAOR. Archived from the original on 24 February 2022. Retrieved 24 February 2022.
  3. "Notes on Demands for Grants, 2021-2022" (PDF). Ministry of Earth Sciences. Archived from the original (PDF) on 4 July 2021.
  4. "10th Foundation Day celebration of NCAOR". NCAOR Indian Expeditions. Archived from the original on 21 July 2011.
  5. "10th Foundation Day celebration of NCAOR". NCAOR Indian Expeditions. Archived from the original on 21 July 2011.
  6. "10th Foundation Day celebration of NCAOR". NCAOR Indian Expeditions. Archived from the original on 21 July 2011.
  7. "Faculty". Centre for Oceans, Rivers, Atmosphere and Land Sciences. Archived from the original on 4 March 2012.
  8. "Our Proud Past". Allahabad University Alumni Association. Archived from the original on 7 July 2012.
  9. Sagar Kanya begins Indian Ocean expedition to study tsunami impact. The Hindu, 7 January 2005, Dr. P. C. Pandey Founder Director NCAOR
  10. "Our Director". NATIONAL CENTRE FOR POLAR AND OCEAN RESEARCH. Archived from the original on 26 February 2022. Retrieved 2023-12-20.
  11. "India in Arctic [sic]". NATIONAL CENTRE FOR POLAR AND OCEAN RESEARCH. Retrieved 2024-01-27.
  12. "India Arctic Portal". National Centre for Antarctic and Ocean Research. Archived from the original on 27 July 2011.
  13. "India Arctic Portal". National Centre for Antarctic and Ocean Research. Archived from the original on 27 ஜூலை 2011. Retrieved 30 நவம்பர் 2025. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |archive url= (help); Unknown parameter |archive url= ignored (|archive-url= suggested) (help)
  14. web |title=India in Arctic [sic] |url=https://ncpor.res.in/arctics |access-date=2024-01-27 |website=NATIONAL CENTRE FOR POLAR AND OCEAN RESEARCH}}
  15. "came into existence with joining P C Pandey as Centre Director" பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம். (PDF) Antarctic Study Centre came in existence with Dr. Pandey
  16. "Himansh". NCPOR. Archived from the original on 2 July 2022. Retrieved 1 June 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]