தேசிய தீநுண்மியியல் நிறுவனம் (பாக்கித்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தானில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனம் (National Institute of Virology - Pakistan) உயிரியல் பாதுகாப்பு மையமாகச் செயல்படும் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். வளர்ந்து வரும் தொற்று நோய்களை அடையாளம் காணவும் ஒழிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட தேசிய ஆய்வக தளமாகவும் உயிரியல் போர் முயற்சிகளாகவும் உள்ளது.[1] கராச்சி பல்கலைக்கழகத்தால் சுகாதார அமைச்சகத்திற்காக நிர்வகிக்கப்படும் பிஎஸ்எல் 3 வகை ஆய்வகமாகும். கராச்சி பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் அறிவியல் பன்னாட்டு நிறுவனம் செப்டம்பர் 19, 2019இல் தேசிய தீநுண்மியியல் நிறுவனத்தை நிறுவியது.[2]

பாக்கித்தானில் சார்சு-கோ2 தீநுண்மி தொற்றால் ஏற்படும் நோயான கோவிட்-19-பெருந்தொற்று ஏற்பட்டபோது இந்த நிறுவனம் முக்கியத்துவம் பெற்றது. இந்நிறுவனம் கோவிட்-19-பெருந்தொற்றினைக் கண்டறியப் பரிசோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ளது.[3][4] இந்தப் பரிசோதனைக் கருவி இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் கொரானோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பாகிஸ்தானில் பெருந்தொற்று ஏற்பட்டபோது, சிந்து மாகாண அரசு பாக்கித்தானின் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தொற்று நோய்களுக்கான சிகிச்சைக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்க பணியினை துவக்கியது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. imedia.com.pk, Interactive Media Pakistan-. "International Center for Chemical and Biological Sciences". iccs.edu (in ஆங்கிலம்). International Center for Chemical and Biological Sciences. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
  2. "KU ICCBS established National Institute of Virology :)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
  3. "KU institute helps Indus Hospital increase COVID-19 diagnosis capacity" (in en). https://www.thenews.com.pk/print/632572-ku-institute-helps-indus-hospital-increase-covid-19-diagnosis-capacity. பார்த்த நாள்: 13 May 2020. 
  4. Rizvi, Safdar. "On the cusp: National Institute of Virology, like many other organizations, are working to develop its own coronavirus diagnostic kit" (in en). https://tribune.com.pk/story/2178450/1-cusp-national-institute-virology-develop-coronavirus-diagnostic-kit/. பார்த்த நாள்: 13 May 2020. 
  5. "Sindh plans to set up modern virology lab - Pakistan Today". Pakistan Today, 2020. https://www.pakistantoday.com.pk/2020/02/02/sindh-plans-to-set-up-modern-virology-lab/. பார்த்த நாள்: 13 May 2020. [தொடர்பிழந்த இணைப்பு]