உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய கேட்டல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய கேட்டல் நாள் (National Day of Listening) என்பது தங்களுடைய குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உள்ளுாில் உள்ள பல சமூகங்களை சார்ந்தவர்களின் கதைகளை பதிவு செய்வதற்காகவும் அமொிக்கர்கள் தங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாக தேசிய கேட்கும் தினமாக காெண்டாடப்படுகிறது. ஸ்டோாி காப்ஸ் என்ற அமைப்பின் மூலமாக 2008-ல் முதன் முதலில் இஃது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் மூலமாக மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிகமான நேரம் இருப்பதற்கு இஃது உதவிபுரிகிறது.

கறுப்பு வெள்ளி என்ற நாளுக்கு மாற்றாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஜாா்ஜ் டபுள்யு புஷ் மற்றும் அவரது மனைவியும் தேசிய கேட்டல் தினத்தின் ஒரு பகுதியாக அவருடைய சகோதாி டோரதி புஷ் கோச்சினால் பேட்டி காணப்பட்டார். [1][2] இதன் ஒரு பகுதியாக 2008 ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான அமொிக்கர்கள் ஒருவரையொருவர் செவ்வி கண்டனர்.

தேசிய பொது வானொலி நிருபர்களான ஸ்க்காட் சைமன், லியென் ஹேன்சன், ஸ்டீவ் இன்ஸ்பிப் ரெனீ மான்டனே, ஃபிராங்க் டெ போர்ட், சூசன் ஸ்டேம்பர்க் மற்றும் நோவா ஆடம்ஸ் ஆகியோா் நேர்காணல் செய்யப்பட்னர்.[3][தொடர்பிழந்த இணைப்பு][4][தொடர்பிழந்த இணைப்பு][5] இந்நிகழ்வானது வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. தேசிய கேட்டல் தினத்தன்று யாரை நேர்காணல் காண்பது எந்த வகையான பேட்டி வடிவத்தை பயன்படுத்தலாம் என்பதற்கான எவ்விதமான நிபந்தனைகளும் இல்லை.[6] வகுப்பறை மற்றும் நூலகத்தில் கேட்கும் தேசிய தினத்தை இணைத்துக் கொள்ள ஆசிாியர்கள் மற்றும் நூலகர்களுக்கு உதவ பல்வேறு வழிகாட்டிகள் உள்ளன.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_கேட்டல்_நாள்&oldid=3217253" இலிருந்து மீள்விக்கப்பட்டது