தேசிய குதிரை ஆராய்ச்சி மையம்

ஆள்கூறுகள்: 29°11′13″N 75°42′05″E / 29.187011°N 75.701251°E / 29.187011; 75.701251
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய குதிரை ஆராய்ச்சி மையம்
வகைபயன்முறை ஆய்வு
உருவாக்கம்7 சனவரி 1986 (1986-01-07)
பணிப்பாளர்மருத்துவர் யஷ் பால்
கல்வி பணியாளர்
31
அமைவிடம், ,
125001
,
29°11′13″N 75°42′05″E / 29.187011°N 75.701251°E / 29.187011; 75.701251
வளாகம்200 ஏக்கர்கள் (0.81 km2)
சுருக்கப் பெயர்NRCE
இணையதளம்nrce.nic.in

தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் (National Research Centre on Equines) இந்தியாவில் 7வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமானது குதிரையின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்திய ஆய்விற்காக இந்த மையத்தினைத் தோற்றுவித்தது.

வரலாறு[தொகு]

நவம்பர் 26, 1985 அன்று ஐ.சி.ஏ.ஆர் தலைமையகத்தில் திட்ட இயக்குநகர ஆரம்ப இணைப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சி, குதிரைகளின் சுகாதாரத்திற்காக ஜனவரி 7, 1986 அன்று ஹிசாரில் இம்மையம் செயல்படத் தொடங்கியது.

பிகானேர் வளாகம்[தொகு]

தேசிய குதிரை ஆராய்ச்சி மையம், பிகானேரில் செப்டம்பர் 28, 1989 அன்று நிறுவப்பட்டது. இம்மையம் குதிரைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. குதிரை மரபியல், ஊட்டச்சத்து, மருத்துவம், இனப்பெருக்கம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி நடத்துவதற்கான அதிநவீன ஆய்வகங்கள் இந்த வளாகத்தில் உள்ளன. குதிரை உரிமையாளர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகக் குதிரையின் செயல்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவது குறித்தும் இம்மையம் ஆய்வுகளைச் செய்கின்றது. சுற்றுச்சூழல் சுற்றுலா மூலம் குதிரைகளின் பாதுகாப்பு மற்றும் பரப்புதல் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தானின் உயர் இரக மார்வாரி, குசராத்தின் கத்தியாவரி குதிரைகள், லடாக்கின் ஜான்ஸ்கரி குதிரைகள் மற்றும் மணிப்பூரின் மணிப்பூரி குதிரைகள் மற்றும் பிரான்சின் போய்ட்டோ கழுதைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.[1] குதிரைகளைப் பற்றிய அடிப்படை தொழில்நுட்ப விவரங்களைச் சித்தரிப்பதற்காகத் தகவல் மையம் மற்றும் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளன. குதிரைகளின் விந்தணுக்களைப் பாதுகாக்க கிரையோ பாதுகாப்பு, செயற்கை கருவூட்டல், அல்ட்ராசோனோகிராபி மற்றும் எக்வைன்களின் எண்டோஸ்கோபி பணிகள் வழக்கமாக இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

ஆணை[தொகு]

  • உடல்நலம் மற்றும் உற்பத்தி மேலாண்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது.
  • குதிரைகளின் முக்கிய நோய்களைக் கண்டறிதல், கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் தேசிய பரிந்துரை வசதி மையமாக செயல்படுவது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Research Centre on Equines". National Research Centre on Equines. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Available Technologies & Products - National Research Centre on Equines". பார்க்கப்பட்ட நாள் 2021-01-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]