தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம்

ஆள்கூறுகள்: 22°33′53.51″N 88°23′49.18″E / 22.5648639°N 88.3969944°E / 22.5648639; 88.3969944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம்
சுருக்கம்NICED
உருவாக்கம்
  • 1962; 62 ஆண்டுகளுக்கு முன்னர் (1962) காலரா ஆராய்ச்சி மையம்
  • 1979; 45 ஆண்டுகளுக்கு முன்னர் (1979) தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது
வகைபொது
சட்ட நிலைசெயலில்
நோக்கம்மருத்துவ ஆராய்ச்சி
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தலைமையகம்
  • பி-33, சிஐடி சாலை, சுபாசு சரோபர் பூங்கா, பூல் பாகன், பேலெஹட்டா
ஆள்கூறுகள்22°33′53.51″N 88°23′49.18″E / 22.5648639°N 88.3969944°E / 22.5648639; 88.3969944
இயக்குநர்
சாந்தா தத்
சார்புகள்இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
வலைத்தளம்www.niced.org.in

தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம் (National Institute of Cholera and Enteric Diseases) என்பது ஒரு இந்திய மருத்துவ நிறுவனம் ஆகும். இது இரையகக் குடல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஆராய்ச்சி, தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளை உருவாக்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா நகரில் அமைந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையுடன் இணைக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுகிறது.[1][2]

வரலாறு[தொகு]

கிழக்கு இந்தியா மற்றும் கங்கை சமவெளி காலரா மற்றும் தொடர்புடைய தொற்றுநோய்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.[3] காலராவினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவின் கைடு தெருவில் காலரா ஆராய்ச்சி மையத்தை 1962இல் அமைத்தது.[4] இந்த மையம் காலரா மற்றும் பிற குடல் தொடர்பான நுரையீரல் நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி நடத்துவதாகும். 1979ஆம் ஆண்டில், காலரா ஆராய்ச்சி மையம் தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. 1980இல் இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் "வயிற்றுப்போக்கு நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கூட்டு மையம்" என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.[5]

இந்தியாவில் COVID-19 தொற்றுநோய்களின் போது (2020), இந்நிறுவன நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஏப்ரல் 2020 இல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின் படி, ஆராய்ச்சியாளர்கள் 24 மணி நேரமும் வேலை செய்தனர்.

அங்கீகாரம்[தொகு]

1968ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு "விப்ரியோ பேஜ் வகைப்படுத்தலுக்கான பன்னாட்டுக் குறிப்பு மையம்" என்ற சிறப்புத் தகுதியினை வழங்கியது.[3] 1980இல் இந்த நிறுவனம் "வயிற்றுப்போக்கு நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான உலக சுகாதார அமைப்பின் கூட்டு மையம்" என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. Debnath, Falguni; Deb, Alok Kumar; Sinha, Abhik; Chatterjee, Pranab; Dutta, Shanta (1 January 2019). "Cleanliness: Success in Water Borne Diseases" (in en). Indian Journal of Medical Research 149 (7): 105. doi:10.4103/0971-5916.251666. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-5916. http://www.ijmr.org.in/text.asp?2019/149/7/105/251666. பார்த்த நாள்: 1 July 2020. 
  2. "NICED : Profile". www.niced.org.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
  3. 3.0 3.1 "National Institute of Cholera and Enteric Diseases." (in en). Journal of Postgraduate Medicine 46 (3): 231. 1 July 2000. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3859. http://www.jpgmonline.com/text.asp?2000/46/3/231/269. பார்த்த நாள்: 1 July 2020. 
  4. "Clinically perfect". https://www.telegraphindia.com/education/clinically-perfect/cid/607273. 
  5. 5.0 5.1 "Microbiologists in Bengal emerge unlikely heroes in COVID-19 time". https://www.newindianexpress.com/cities/kolkata/2020/apr/03/microbiologists-in-bengal-emerge-unlikely-heroes-in-covid-19-time-2125407.html. 

 

வெளி இணைப்புகள்[தொகு]