தேசிய கடல்சார் நிறுவனம், பாக்கித்தான்
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1981 |
தலைமையகம் | கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | பாக்கித்தான் அறிவியல் மற்றும் தொழினுட்ப அமைச்சகம் |
வலைத்தளம் | niopk |
தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography) பாக்கித்தான் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயற்படும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் அமைந்துள்ளது. ' ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் அமைப்பான இந்நிறுவனத்திற்கு பாக்கித்தானின் கூட்டாட்சி அரசாங்கம் நிதியளிக்கிறது. அதே நேரத்தில் நிறுவனத்திற்குத் தேவையான வசதிகள் சிந்து அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]1981 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் கடற்கரை மற்றும் கடலோரப் பகுதிகளில் கடல்சார்வியலில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத் தீர்மானத்தின் மூலம் தேசிய கடல்சார் நிறுவனம் நிறுவப்பட்டது.[2] இந்த நிறுவனத்தில் 30 தகுதிவாய்ந்த கடல் விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். கடல் உயிரியல், கடல் உயிரிகள் உற்பத்தித்திறன், கடல் வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல், இயற்பியல் கடல்சார்வியல், கடலோர நீர்ம இயல், கடல் புவியியல் மற்றும் புவி இயற்பியல் ஆகிய துறைகளில் இவர்கள் ஆய்வு மேற்கோள்கின்றனர். .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Project under way to check sea level rise". Dawn (newspaper). 8 June 2021. https://www.dawn.com/news/1628131.
- ↑ "Pakistan eager to revive Antarctic expedition". Gulf News (newspaper). 25 October 2020. https://gulfnews.com/world/asia/pakistan/pakistan-eager-to-revive-antarctic-expedition-1.74813273.
புற இணைப்புகள்
[தொகு]- பாக்கித்தான் தேசிய கடல்சார் நிறுவனம் அதிகாரப்பூர்வ இணையதளம்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்