தேசிய ஒருமைப்பாட்டு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய ஒருமைப்பாட்டு நாள்
சர்தார் வல்லபாய் படேல் மற்றும் ஒற்றுமைக்கான சிலையுடன் கூடிய நினைவு அஞ்சல் தலை (2016)
அதிகாரப்பூர்வ பெயர்Rashtriya Ekta Diwas
வகைதேசியம்
முக்கியத்துவம்வல்லபாய் படேலின் பிறந்ததின நாள்
நாள்31 அக்டோபர்
நிகழ்வுஆண்டுதோறும்

தேசிய ஒருமைப்பாட்டு நாள் (National Unity Day; இந்தி: राष्ट्रीय एकता दिवस , ISO : Rāṣṭrīya ēkatā divasa) என்பது இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2014-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.[1][2]

குறிக்கோளும் உறுதிமொழியும்[தொகு]

இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, " நம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான உண்மையான மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தாங்குவதற்கும் நமது தேசத்தின் உள்ளார்ந்த வலிமை மற்றும் மேம்பாட்டினை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்நாள் வழங்கும்" என்பதாகும்.[3]

இன்றைய நாளில், அரசு அலுவலகங்களில் இந்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படுகிறது:[1]

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைக் காக்க என்னை அர்ப்பணிப்பேன் என்றும், இந்தச் செய்தியை எனது சக நாட்டு மக்களிடையே பரப்பவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், செயல்களாலும் சாத்தியமாக்கப்பட்ட எனது நாட்டை ஒருங்கிணைக்கும் உணர்வில் இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்ய எனது சொந்த பங்களிப்பை வழங்கவும் நான் உளமார உறுதியளிக்கிறேன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "What is National Unity Day and why is it celebrated on 31st October?". Scroll.in. 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  2. "Nation observes Rashtriya Ekta Diwas on birth national unity day also known as anniversary of Sardar Vallabhbhai Patel", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 31 October 2016
  3. "Observance of the Rashtriya Ekta Diwas on 31st October", pib.nic.in, New Delhi: National Informatics Centre, 24 October 2014

வெளி இணைப்புகள்[தொகு]