தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் சின்னம்

தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் (National Hydrogen and Fuel Cell Day) என்பது எரிபொருள் மின்கலம் மற்றும் ஐதரசன் ஆற்றல் சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட்து. எரிபொருள் மின்கலம், ஐதரசன் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குதல் இன்று இத்துறையின் வீச்சு மற்றும் எதிர்காலத்தில் இத்தொழில் துறை எவ்வளவு தூரம் மேம்படப்போகிறது என்பதை கொண்டாடுவதும் இத்தினம் அனுசரிப்பதன் நோக்கமாகும்.

அக்டோபர் மாதம் 8 ஆம் நாள் (10.08) இக்கொண்டாட்டத்திற்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐதரசனின் அணு எடையான 1.008 என்பதை அட்டிப்படையாக்க் கொண்டு இந்த நாள் தெரிவு செய்யப்பட்டது.

அலுவல் ரீதியாக அக்டோபர் மாதம் 8 ஆம் நாள் தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் தெரிவு செய்யப்பட்டது முறையாக அறிவிக்கப்பட்டது

தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் நிகழ்வுகள்[தொகு]

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் செல் மற்றும் ஐதரசன் ஆற்றல் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்கள், கூட்டுக் குழுக்கள், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுடன் தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல தினத்தைக் கொண்டாடி நினைவுகூர்கின்றனர் [1].

  • 2017 நடவடிக்கைகள்[2]
  • 2016 நடவடிக்கைகள்[3]
  • 2015 நடவடிக்கைகள்[4]

அமெரிக்கத் தீர்மானங்கள்[தொகு]

  • 115 வது காங்கிரசு – 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று ஆலோசனைசபை தீர்மானம் 664 ஐ நிறைவேற்றியது. இதன்படி தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் அக்டோபர் 8 என்று முடிவெடுக்கப்பட்டது[5].
  • 115 வது காங்கிரசு - 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று ஆலோசனைசபை தீர்மானம் 287 ஐ நிறைவேற்றியது. இதன்படி தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் அக்டோபர் 8 என்று முடிவெடுக்கப்பட்டது[6].
  • 114 வது காங்கிரசு - 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று ஆலோசனைசபை தீர்மானம் 573 ஐ நிறைவேற்றியது. இதன்படி தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் அக்டோபர் 8 என்று முடிவெடுக்கப்பட்டது[7].
  • 114 வது காங்கிரசு - 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று ஆலோசனைசபை தீர்மானம் 217 ஐ நிறைவேற்றியது. இதன்படி தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் அக்டோபர் 8 என்று முடிவெடுக்கப்பட்டது[8].

மேற்கோள்கள்[தொகு]

.