தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு
Website | http://www.naco.gov.in |
---|
தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு (National AIDS Control Organisation), 1992-ல் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். இது 35 எச்.ஐ.வி/எயிட்சு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சங்கங்கள் மூலம் இந்தியாவில் எச்.ஐ.வி / எயிட்சு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குத் தலைமை தாங்குகிறது. இந்தியாவில் எச்.ஐ.வி/எயிட்சு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் தலைமைத் தாங்கும் ஓர் அமைப்பாகும்.[1][2][3][4]
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து இரத்த வங்கி உரிமம், இரத்த தான நடவடிக்கைகள் மற்றும் இரத்த மாற்றம் மூலம் பரவும் தொற்று பரிசோதனை மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றில் கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ளும் அமைப்பாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம்- தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனத்துடன் இணைந்து தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை (ஒவ்வொரு 2 வருடங்களுக்கும்) எச். ஐ. வி. மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. இறுதி மதிப்பீடு 2019 செய்யப்பட்டது. இந்தியாவில் எச். ஐ. வி. மதிப்பீட்டின் முதல் நிகழ்வு 1998-ல் செய்யப்பட்டது.[5]
2010ஆம் ஆண்டில், தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்துவதற்குக் கல்வி உபகரணங்களைப் பாடத்திட்டத்துடன் அங்கீகரித்தது. இது பாலினக் கல்வியுடன் இணைக்கப்பட வேண்டிய பாடத்திட்டத்தில் எயிட்சு கல்வியை முதன்முறையாக வழங்கியது.[6]
2012-ல், தேசிய எயிட்சு கட்டுப்பாட்டு அமைப்பு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான மற்ற 16 அமைப்புகளுடன் இணைந்து, "பெஹ்சான்" திட்டத்தின் கீழ் "ஹிஜ்ரா ஹப்பா" என்ற நிகழ்ச்சியினை நடத்தியது. இந்த நிகழ்வில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் ஹிஜ்ரா சமூகத்தின் பிரதிநிதிகள், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமை சமூகத்தின் உறுப்பினர்களுடன் உரையாடினர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ National AIDS Control Organisation (1992 - ) www.hivpolicy.org.
- ↑ NACO பரணிடப்பட்டது 2010-12-24 at the வந்தவழி இயந்திரம் aidsportal.org.
- ↑ India to Increase HIV Treatment Centers By NIRMALA GEORGE, The Associated Press, Washington Post, 29 September 2006.
- ↑ For once, it's good not being world No.1 தி எகனாமிக் டைம்ஸ், 7 July 2007.
- ↑ "NACO releases HIV Estimations 2017 report". The Hindu. 14 September 2014.
- ↑ "National AIDS Control Organisation of India approves TeachAIDS curriculum". TeachAids. 15 January 2010. Archived from the original on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 December 2010.
- ↑ "National Hijra Habba organised in Delhi - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/delhi/National-Hijra-Habba-organised-in-Delhi/articleshow/13922992.cms.