உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
Established1918 (குன்னூர்)
1958 (ஐதராபாத்து (இந்தியா))
Budget₹6.43 பில்லியன் (ஐஅ$75 மில்லியன்)
Locationதார்னாகா, ஐதராபாத்து (இந்தியா)
Addressஜாமியா-உசுமானியா
Websitewww.nin.res.in

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institute of Nutrition, Hyderabad) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் இந்திய பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையமாகும்.[1][2] இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும், மேலும் உசுமானியா பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள மிகப்பெரிய மையமாகும். இந்த நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள நிலோஃபர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி மருத்துவமனை மற்றும் உசுமானியா பொது மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்புடைய மருத்துவ மற்றும் குழந்தை ஊட்டச்சத்து ஆராய்ச்சிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

தேசிய ஆய்வக விலங்கு அறிவியல் மையம் (உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள வசதியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது), உணவு மற்றும் மருந்து நச்சுயியல் ஆராய்ச்சி மையம், தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்புப் பணியகம் ஆகியவை இதன் மற்ற பிரிவுகளாகும்.[3] இவை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்காகச் செயல்படுகின்றன.[4] இந்த நிறுவனம் இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையிடமிருந்தும் நிதி பெறுகிறது. இந்த நிறுவனம் முக்கியமாக உடல் பருமன்,[5][6] நீரிழிவு நோய், உணவு வேதியியல், உணவியல், மருத்துவ நச்சுயியல் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு[7][8] ஆகியவற்றில், அமெரிக்காவில் உள்ள ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி, வாங்சிடன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி மற்றும் சான்நு காப்கின்சு ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளி[9][10][11] போன்ற மையங்கள் மற்றும் ஆத்திரேலியாவில் உள்ள வொல்லோங்காங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.[12][13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Bhargava, Pushpa M (12 November 2011). "Could they buy salt and spices, fuel and milk, and pay rent... with Rs. 2.33 a day?". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/opinion/open-page/article2622214.ece.
  2. ↑ "International Conference on Translational Research" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304220123/http://www.indianpharmacology.org/Announcements_2010.pdf. பார்த்த நாள்: 21 August 2012.
  3. ↑ About ICMR, Indian Council of Medical Research, retrieved 15 August 2010 ICMR's Institutes/Centres பரணிடப்பட்டது 7 சூன் 2015 at the வந்தவழி இயந்திரம் (scroll down page to find NIN)
  4. ↑ Special Correspondent (11 October 2012). "NATIONAL / ANDHRA PRADESH : Governor for review of PDS". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/governor-for-review-of-pds/article3986410.ece. பார்த்த நாள்: 7 December 2012.
  5. ↑ K. S. Jayaraman (2005). "'Sumo' rats set researchers on hunt for obesity genes". Nature Medicine 11 (2): 108. doi:10.1038/nm0205-108a. பப்மெட்:15692582.
  6. ↑ Sinha, Jitendra Kumar; Ghosh, Shampa; Swain, Umakanta; Giridharan, Nappan Veethil; Raghunath, Manchala (2014). "Increased macromolecular damage due to oxidative stress in the neocortex and hippocampus of WNIN/Ob, a novel rat model of premature aging". Neuroscience 269: 256–264. doi:10.1016/j.neuroscience.2014.03.040. பப்மெட்:24709042.
  7. ↑ Venu, L; Harishankar, N; Krishna, T. P.; Raghunath, M (2004). "Does maternal dietary mineral restriction per se predispose the offspring to insulin resistance?". European Journal of Endocrinology 151 (2): 287–94. doi:10.1530/eje.0.1510287. பப்மெட்:15296486.
  8. ↑ "Severe but Not Moderate Vitamin B12 Deficiency Impairs Lipid Profile, Induces Adiposity, and Leads to Adverse Gestational Outcome in Female C57BL/6 Mice". Frontiers in Nutrition 3 (1): 1–10. 2016. doi:10.3389/fnut.2016.00001. பப்மெட்:26835453.
  9. ↑ Fernandez-Rao, Sylvia; Hurley, Kristen M.; Nair, Krishnapillai Madhavan; Balakrishna, Nagalla; Radhakrishna, Kankipati V.; Ravinder, Punjal; Tilton, Nicholas; Harding, Kimberly B. et al. (2014). "Integrating nutrition and early child-development interventions among infants and pre-schoolers in rural India". Annals of the New York Academy of Sciences 1308 (1): 218–231. doi:10.1111/nyas.12278. பப்மெட்:24673168. Bibcode: 2014NYASA1308..218F.
  10. ↑ "National conference on nutrition security at NIN, Hyderabad – The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/National-conference-on-nutrition-security-at-NIN-Hyderabad/articleshow/26102538.cms.
  11. ↑ "Mice to reveal key to human obesity". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616025726/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-21/hyderabad/29568244_1_fight-obesity-obese-mice-obese-rats.
  12. ↑ Australia-India food research partnerships on the menu – News & Media @ UOW. Media.uow.edu.au. 27 March 2008. http://media.uow.edu.au/news/UOW042952.html. பார்த்த நாள்: 1 September 2012.
  13. ↑ "Director in charge of NIN". The Hindu. 31 August 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article3846468.ece. பார்த்த நாள்: 3 September 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]