தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
| தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் | |
|---|---|
| राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान | |
| நாடு | இந்தியா |
| பிரதமர் | நரேந்திர மோதி, மன்மோகன் சிங் |
| அமைச்சகம் | கல்வி அமைச்சகம் |
| துவங்கியது | மார்ச்சு 2009 மன்மோகன் சிங் |
தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) என்பது, இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு மத்திய அரசு நிதியுதவித் திட்டமாகும். 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமத்துவத்திற்கான சூழலை வழங்கும் நோக்கில், இத்திட்டத்தின் செயலாக்கம் 2009–2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோசனை, பல்வேறு செயலாக்க நடவடிக்கைகள் மற்றும் நிதிசார் ஆதரவு ஆகியவற்றை தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.[1] இடைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 52 சதவீதத்திலிருந்து லிருந்து (2005–2006 நிலவரம்) ஐந்து ஆண்டுகளில் — அதாவது 2009 முதல் 2014 வரையிலான ஆண்டுக்காலத்தில் 75 சதவீதமாக உயர்த்துவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.[2] 15 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் அனைவருக்கும் கல்வி வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] மத்திய அமைச்சகத்திடமிருந்து நிதி மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் தனித்தனிச் செயலாக்க முகமைகளை அமைத்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.[4] பதினோறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் (2002-2007) ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ₹2,012 பில்லியன் ரூபாய்களாகும்.[5]
நோக்கங்கள்
[தொகு]தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின் நோக்கங்களை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.[3]
- கல்வி மேம்பாட்டிற்காக
- அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இடைநிலைக் கல்வியின் தரத்தினை மேம்படுத்துதல்.
- பாலினம், சமூக-பொருளாதாரம் மற்றும் இயலாமையால் ஏற்படுகின்ற தடைகளை நீக்குதல்.
- பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதிக்குள் (2017 ஆம் ஆண்டுக்குள்) இடைநிலைக் கல்வியில் உலகளவிலான மாற்றங்களை மேம்படுத்துதல்.
- 2020 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளி வயதுக்குழந்தைகளையும் இடைநிற்றலின்றி பள்ளியில் சோ்த்தல்.
இடைநிலைக் கல்விக்கான திட்டமிடல்
[தொகு]பின்னணி
[தொகு]- 1986 ஆம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் இடைநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி அமைப்புகளின் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
- இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும், தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பாடநெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்களைப் புதுப்பிப்பதுமாகும். திறந்தவெளி கற்றல் முறை, ஆசிரியர் பயிற்சி மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கும் பல்வகைப்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் விடுதி வசதிகள் வழங்குவது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த கல்வி அளிப்பது போன்ற அம்சங்களும் இத்திட்டத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன..[6]
தனியார் துறையின் பங்கேற்பு
[தொகு]அரசு சாரா நிறுவனங்கள் உட்பட தனியார் துறையின் பங்களிப்பு அதிகரித்தது. தற்போது, இந்த தனியார் துறைகள் சுமார் 51% இடைநிலைப் பள்ளிகளையும், 58% உயர்நிலைப் பள்ளிகளையும் நிர்வகிக்கின்றன.
தேசிய மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் மூலம் முறையான கல்வி முறைகளில் சேர முடியாத குழந்தைகளுக்கு தொடர்பு மையங்கள் மற்றும் பல ஊடக தொகுப்புகளைப் பயன்படுத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்தத் திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன், குறிப்பாக சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல், கணிதம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற கல்வியின் உள்ளடக்கம், செயல்முறை மற்றும் தரம் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தியது.
இந்தத் திட்டம் தேசியகல்விக் கொள்கைக்குப் பிறகு, பாடத்திட்டத்தை திருத்துதல், மேம்பட்டக் கல்விக்கான வள மையங்கள் மற்றும் கணினி உதவி பெறும் தேசிய மையம் போன்றவற்றை அமைப்பதி்ல் புதிய முயற்சிகளை செயல்படுத்துகிறது.
மனிதவளத் தேவை மற்றும் கல்வித் தடைகள் போன்றவற்றின் காரணமாக கல்வியின் தொழில்மயமாக்கலில் தெளிவு இல்லை. எனவே, 2000 ஆம் ஆண்டளவில், 25% க்கு எதிராக 10% மாணவர்கள் மட்டுமே தொழிற்கல்விப் பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனா்.
சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான திட்டமிடல்
[தொகு]1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஒரு உத்வேகத்தைப் பெற்றது. இந்தச் சட்டம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்விக்கான இலவச அணுகல், சில நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்குதல், போக்குவரத்தில் பாகுபாடு காட்டாதது, ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு நிதி ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்குவதற்கு சில துறைகள் மற்றும் அதிகாரிகளை செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டம், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்களிடையே மனப்பான்மை மாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது.[7]
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RMSA India". rmsaindia.org.
- ↑ Ministry of Human Resource Development. "Rashtriya Madhyamik Shiksha Abhiyan". National Informatics Centre. Retrieved 2 February 2014.
- 1 2 "Rashtriya Madhyamik Shiksha Abhiyan". EdCIL (India) Limited. Archived from the original on 3 February 2014. Retrieved 2 February 2014.
- ↑ "Rashtriya Madhyamik Shiksha Abhiyan". Indian Yojana. Archived from the original on 3 February 2014. Retrieved 2 February 2014.
- ↑ "Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RSMA)". Bihar Madyamik Siksha Parishad. Archived from the original on 3 February 2014. Retrieved 2 February 2014.
- ↑ Service, Tribune News. "Move to cut salary in lieu of regular jobs under lens" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/archive/move-to-cut-salary-in-lieu-of-regular-jobs-under-lens-866484.
- ↑ "RMSAINDIA". rmsaindia.org.