உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவனம்
நிறுவப்பட்டது1975
ஆய்வு வகைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு
பணிப்பாளர்சி. அனந்தராமகிருஷ்ணன்
அமைவிடம்திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
Campusநகரம்
Affiliationsஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்;

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவனம் (National Institute for Interdisciplinary Science and Technology)(முன்பு மண்டல ஆராய்ச்சி ஆய்வகம், திருவனந்தபுரம்) என்பது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் அங்கமான ஆய்வகமாகும்.

விளக்கம்

[தொகு]

இந்நிறுவனம் 1975-ல் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமாக நிறுவப்பட்டு, பின்னர் 1978-ல் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரிடப்பட்டது, பின்னர் 2007-ல் [1] தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவனம் மறுபெயரிடப்பட்டது.

இது வேளாண் செயலாக்கமும் தொழில்நுட்பமும், நுண்ணுயிர் செயல்முறையும் தொழில்நுட்பமும், இரசாயன அறிவியல் மற்றும் தொழினுட்பம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பொருள் அறிவியல் மற்றும் தொழினுட்பம் மற்றும் செயல்முறை பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் தொழினுட்பம் உள்ளிட்ட துறைகளும் செயல்படுகிறது. ஏறக்குறைய 80 அறிவியலாளர்களும், 300 ஆராய்ச்சியாளர்களும் இந்த நிறுவனத்தில் பல்வேறு அறிவியல் துறைகளில் பணிபுரிகின்றனர். திட்டங்கள் அடிப்படை ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல் ஆகிய பலதுறைகள் செயல்படுகின்றன. இதன் முக்கிய ஆராய்ச்சி நோக்கங்களாகத் தேசிய பணித் திட்டங்கள், பிராந்திய வளம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாடு - தொழில் - கல்வித்துறை இணைப்புகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட உந்துதல்களுடன் செயல்படுகிறது. இந்த ஆய்வகம் முன்னணி தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனும் சிறந்த கூட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது.

ஆராய்ச்சி பிரிவுகள்

[தொகு]

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவனத்தில் செயல்படும் முக்கிய ஆராய்ச்சிப் பிரிவுகள்:

1. வேளாண் செயலாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு

2. நுண்ணுயிர் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவு

3. வேதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு

4. பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு

5. சுற்றுச்சூழல் தொழில்நுட்ப பிரிவு

பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு செயல்பாட்டுப் பொருட்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டுப் பொருட்கள் நானோ-மண்பாண்டத் தொழில், ஆற்றல் பொருட்கள், பலமடி பொருட்கள், மின்னணு பொருட்கள் மற்றும் காந்தப் பொருட்கள் தொடர்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

  • நானோ சுட்டாங்கல்
  • ஆற்றல் பொருட்கள்
  • பலமடி பொருட்கள்
  • மின்னணு பொருட்கள்
  • காந்தப் பொருட்கள்

கனிமங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உலோகங்கள் மற்றும் தாதுக்கள் தொடர்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

  • ஒளி உலோகங்கள், உலோகக்கலவைகள் மற்றும் கலவைகள்
  • கனிமங்கள்

வேளாண் செயலாக்க பிரிவு

[தொகு]

எண்ணெய் வித்துக்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் இயற்கைப் பொருட்களைச் செயலாக்குவதற்கான புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்குப் பிரிவு இதுவாகும். இந்தப் பிரிவின் முக்கியத் திறன் செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான முழுப்பொறியியல் தொழில்நுட்ப தொகுப்புகளாக இத்தகைய செயல்முறைகளை மாற்றுவதில் உள்ளது. இப்பிரிவு பல மாநிலங்களில் பல வணிக ஆலைகளை அமைத்துள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் தொடர்புடைய பகுதிகளில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவதிலும் முக்கியச் செயலாற்றுகிறது. மசாலாப் பொருட்கள் மற்றும் இயற்கைப் பொருட்களின் தொழில்நுட்ப வணிக அடைகாக்கும் மையம் புதுமையான தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. செம்பனை எண்ணெய், மசாலா எண்ணெய்/நல்லெண்ணெய் ஆகியவற்றின் தர மேம்பாடு, புதிய மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களைச் செயலாக்குவதற்கான தொழினுட்பம், வெப்ப உணர்திறன் பொருள்களின் குளிர்பதன உறிஞ்சுதல் ஈரப்பதமற்ற உலர்த்துதல், இஞ்சி எண்ணெய் பிரித்தெடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுகள் ஆகியவை இப்பிரிவின் முக்கிய ஆராய்ச்சிகளில் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CSIR – National Institute for Interdisciplinary Science and Technology (NIIST) » About Us". Archived from the original on 2022-10-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.

வெளி இணைப்புகள்

[தொகு]