தேசிய அங்கீகார வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய அங்கீகார வாரியம்
சுருக்கம்என் பி ஏ
துவங்கியது1994; 29 ஆண்டுகளுக்கு முன்னர் (1994)
வகைதன்னாட்சி (2010 முதல்)
தலைமையகம்புது தில்லி, இந்தியா
தலைவர்கே. கே. அகர்வால்
உறுப்பினர் செயலர்அனில் குமார் நாசா
Affiliationsஉயர்கல்வி, கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)
வலைத்தளம்www.nbaind.org

தேசிய அங்கீகார வாரியம் (National Board of Accreditation) என்பது இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்திற்குப்பொறுப்பான இரண்டு முக்கிய அமைப்புகளுள் ஒன்றாகும்.[1] தேசிய அங்கீகார வாரியம், தொழில்நுட்பத் திட்டங்கள், பொறியியல் மற்றும் மேலாண்மைத் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பாக உள்ளது.[2] வாசிங்டன் ஒப்பந்தத்தின் முழு உறுப்பினர் இந்த அவை உள்ளது.

வரலாறு[தொகு]

தேசிய அங்கீகார வாரியம் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் 1994ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வாரியம் 2010 முதல் தன்னாட்சி அமைப்பாக இயங்குகிறது.[3] 2014-ல் வாசிங்டன் ஒப்பந்தத்தில் முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.

அங்கீகாரம் பெற்ற திட்டங்கள்[தொகு]

தேசிய அங்கீகார வாரியம் கல்வித் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. இதில் பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப கல்வித் திட்டங்கள் அடங்கும். அங்கீகாரம் பெற்ற துறைகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, மருந்தகம், கட்டிடக்கலை, பயன்பாட்டுக் கலை மற்றும் கைவினைப்பொருட்கள், கணினி பயன்பாடுகள் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை ஆகியவை அடங்கும். [4]

அங்கீகாரம் தன்னார்வமாக இருந்தாலும், 2017-ல் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு ஒரு கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் கற்பிக்கப்படும் பாதி திட்டங்களுக்கு அங்கீகாரம் பெறத் தவறிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காது என்று அறிவித்தது.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kohli, Gauri (21 March 2017). "Global drive planned to check fake colleges and universities" (in en). Hindustan Times. http://www.hindustantimes.com/education/global-drive-planned-to-check-fake-colleges-and-universities/story-nvXyHa6PYHk5kIZjT5vG4J.html. 
  2. Mohanty, Basant Kumar (2 January 2017). "IITs loath to take up accreditation role". The Telegraph. https://www.telegraphindia.com/1170102/jsp/nation/story_128079.jsp. 
  3. "National Board of Accreditation". www.nbaind.org. 2 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Program Accreditated by NBA". www.nbaind.org. 3 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. Nanda, Prashant K. (12 April 2017). "How AICTE wants engineering, B-Schools to improve students’ job readiness". Mint. http://www.livemint.com/Education/VMdWWCKcj2qrYiaHgKjLmL/How-AICTE-wants-engineering-BSchools-to-improve-students.html. 

வெளி இணைப்புகள்[தொகு]