தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்
துறை மேலோட்டம்
அமைப்பு11 மார்ச்சு 1986; 38 ஆண்டுகள் முன்னர் (1986-03-11)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்என் எச்-8, சர்வீஸ் சாலை, மகிபால்பூர், புது தில்லி - 110037
குறிக்கோள்தகவல் தொழில்நுட்பங்களை இந்தியக் காவல்துறைக்கு அதிகாரமளித்தல்
அமைப்பு தலைமை
  • விவேக் கோகியா, இகாப[1], இயக்குநர்
மூல நிறுவனம்இந்திய உள்துறை அமைச்சகம்
முக்கிய ஆவணம்
வலைத்தளம்ncrb.gov.in

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பொறுப்புள்ள இந்திய அரசு நிறுவனம் ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. இதன் தற்போதைய இயக்குநர் இகாப அதிகாரியான விவேக் கோகியா ஆவார். கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் சேகரித்த தகவல்களை தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் முதன்மைப் பணி, இந்தியாவில் 7 ஆண்டு மற்றும் அதற்கும் மேல் தண்டனை பெற்ற குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக செயல்படுவதால், குற்றத்தை குற்றவாளிகளுடன் இணைப்பதில் புலனாய்வாளர்களுக்கு உதவுகிறது. ஒருங்கிணைப்பு மற்றும் காவல்துறை கணினி இயக்குநரகம், நடுவண் புலனாய்வுச் செயலகம்யின் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவியல் தரவுப் பிரிவு மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் மத்திய கைரேகைப் பணியகத்தை இணைப்பதன் மூலம் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின்[2] முந்தைய புள்ளியியல் கிளையும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பிரிக்கப்பட்டது.[3]

பணி[தொகு]

சட்டத்தை நிலைநாட்டவும் மக்களைப் பாதுகாக்கவும் இந்திய காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் குற்றவியல் புலனாய்வு மூலம் அதிகாரம் அளித்தல். குறிப்பாக தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு குற்ற பகுப்பாய்வில் தலைமைத்துவத்தையும் சிறப்பையும் வழங்குதல்.

இலக்குகள்[தொகு]

  1. சட்ட அமலாக்க நிறுவனங்களுக்காக குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய பாதுகாப்பான பகிரக்கூடிய தேசிய தரவுத்தளங்களை உருவாக்கி பராமரித்து, ''பொதுச் சேவை வழங்குதல்
  2. தேசிய அளவில் குற்றப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து செயலாக்குதல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களைத் தெளிவுபடுத்துதல்.
  3. தொழில்நுட்ப பயன்பாடுகளின் வளர்ச்சியை வழிநடத்தி ஒருங்கிணைத்து, காவல் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பச் சூழலை உருவாக்குதல்.
  4. அனைத்து குற்றவாளிகளின் கைரேகைகளின் தேசிய களஞ்சியமாக செயல்படுதல்.
  5. மாநில குற்ற காப்பகம் மற்றும் மாநில கைரேகைப் பணியகம் ஆகியவற்றில் செயல்திறனை மதிப்பிடுதல், நவீனப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்.
  6. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைரேகை அறிவியலில் காவல் படைகளில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு செய்தல்.

குறிக்கோள்கள்[தொகு]

  1. பல்வேறு சட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கைரேகை பதிவுகளை பராமரித்தல்.
  2. இந்தியாவில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளில் இருந்து அடையாளம் தெரியாத மாநிலங்களுக்கு இடையே கைது செய்யப்பட்ட/சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பான தேடுதலை நடத்துதல்.
  3. சர்வதேச குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் இன்டர்போல் அனுப்பிய ரெட் கார்னர் அறிக்ககைகளை பராமரித்தல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் குறிப்புகளை இன்டர்போல் மூலம் தேடுதல்.
  4. மத்திய அரசு துறைகள் / சட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களில் கேள்விக்குரிய விரல் பதிவுகளை ஆய்வு செய்தல்.
  5. மாநிலங்களின் கைரேகைப் பணியகத்தின் பணிகளை ஒருங்கிணைத்து, கைரேகை அறிவியல் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
  6. கைரேகை பதிவு இயக்குநர்கள் அகில இந்திய மாநாட்டை நடத்துவது.
  7. கைரேகை நிபுணர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக ஆண்டுதோறும் அகில இந்திய வாரியத் தேர்வை நடத்துதல்.
  8. ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய காவல் பணி கூட்டத்தில் கைரேகை அறிவியலில் போட்டி நடத்துதல்.

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) முன்மொழிவு 2022[தொகு]

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த சட்ட முன்மொழிவு பிரிவு 2(1)(பி) கட்ட்டாயப்படுத்துகிறது. இவ்வாறு சேகரிப்பட்ட தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமிக்கும். சிறைக் கைதிகளின் பயோமெட்ரிக் தரவுகளை 75 ஆண்டுகள் ஆவணப்படுத்தும் உரிமையை இந்த சட்ட முன்மொழிவு வழங்கியுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Appointment of Shri Ramphal Pawar as Director". PIB. 2018-12-17. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
  2. Bureau of Police Research and Development
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 29 August 2018. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]