தேசாந்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசாந்திரி எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு தமிழ்க் கட்டுரை நூல். இது நூலின் ஆசிரியர் பயணம் செய்த ஊர்களில் அவர் பெற்ற அனுபவங்கள் மற்றும் அவ்வூரின் வரலாறு ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்ட நூல். இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பின்னர் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது.

சென்னை, சாரநாத் முதலியன பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்துகிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டுசெல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை "

"நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பும் பிரமாண்டமான அதன் விசையும் , ஈரக்காற்றும் எப்படி நேரில் காணாமல் உணரமுடியதோ , அது போல , இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யாமல் ஒருவன் இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை மனதில் உருவாக்கவே முடியாது "

"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றன் . அது சந்தேகத்தின் நிழல் விழாத காலம். இன்று நாம் அடையாள அட்டைகளும் கடவுச் சீட்டுகளும் இல்லாமல் பயணிப்பது சாத்தியமில்லை. அலைந்து திரியும் துறவிகளே கூட தங்களுடைய பெயரை உடலில் பச்சை குதிக்கொண்டு அதை அடையாள அட்டைப் போலக் காட்டுகிறபோது , நான் எம்மாத்திரம் சொல்லுங்கள் "

" கோழிக்குஞ்சுகளுக்குக் கூட நீலம்,மஞ்சள்,சிவப்பு என நிறம் மாற்றி பூசி விற்கத் தொடங்கிவிட்ட வணிக உலகில் கலைகள், சிற்பம், பாரம்பரிய இசை என்று பேசுவது கூட பைத்தியகாரத்தனமானதாக கருதப்படும். ஆனாலும், காலத்தில் நாம் எதையல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது"

"டீக்கடைகளை விடவும் அதிகமாக பாலர் பள்ளிகள் பெருகிவிட்டன, கோழிப்பண்ணைகளைவிட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன என்றால், கல்வி வளர்கிறது என்று அதற்கு அர்த்தம் இல்லை. டீக்கடையைவிட,கோழிப்பண்ணையைவிட கல்வி அதிக வருமானம் தரும் வணிகமாகிவிட்டது என்பதே பொருள். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருக்கும் இந்தக்கல்விச் சீர்கேடு, நோய்க்கிருமியை விடவும் மிக ஆபத்தானது"

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசாந்திரி&oldid=2985050" இலிருந்து மீள்விக்கப்பட்டது