தேசல்பூர் தொடருந்து நிலையம்
தேசல்பூர் தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சனாதன் படிதார் வாடி சாலை, தேசல்பூர், கட்ச் மாவட்டம், குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 23°12′04″N 69°26′09″E / 23.201065°N 69.435847°E | ||||
| ஏற்றம் | 175 மீட்டர்கள் (574 அடி) | ||||
| உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | காந்திதாம்–நலியா வழித்தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| இணைப்புக்கள் | ஆட்டோ நிறுத்தம் | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரைத்தளம்) | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | DSLP | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | அகமதாபாது | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
தேசல்பூர் தொடருந்து நிலையம் (Deshalpur railway station) , இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையமாகும். இதன் குறியீடு DSLP ஆகும். இந்த நிலையத்தில் ஒரு நடைமேடை உள்ளது. இது தேஷல்பூர் கிராமத்திற்கு சேவை செய்கிறது மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் தளத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.
புஜ் நகருடன் இணைப்பதற்காக, இந்த நிலையத்தில் 1980-ல் ஒரு மீட்டர் அகல இரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர், காந்திதாம்–புஜ் பகுதி அகல தொடருந்து பாதையாக மாற்றப்பட்டதாலும், இந்த 101.24 கி.மீ பாதை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாலும், இப்பாதை பின்னர் கைவிடப்பட்டது சமீபத்தில், ஜூன் 2016 -ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அகலப் பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இது பொது, இராணுவ அல்லது சரக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். [1] [2] [3] [4] [5] 2018-ஆம் ஆண்டில் புஜ் மற்றும் தேசல்பூர் கிராமத்திற்கு இடையிலான தொடருந்து பிரிவு (28 கி.மீ.) பாதை தனிமைப்படுத்தப்பட்டது.தேஷல்பூர்–நலியா பிரிவு (74 கி.மீ) அகலப்பாதை மாற்றத்தின் கீழ் இருந்து, செயல்பாட்டுக்கு வந்தது.திசம்பர் 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த நிலையத்திலிருந்து மற்றும் இந்த நிலையத்திற்கு எந்த தொடருந்து சேவைகளும் இல்லை. [1]
புஜ்-நலியா தொடருந்து பாதை, பாகிஸ்தானுடனான எல்லை மற்றும் நலியா விமானப்படை நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [6]
நலியாவிற்கு வடமேற்கே 25 கி.மீ.தொலைவில் உள்ள வயோர் கிராமம் வரை தொடருந்து பாதையை நீட்டிக்கும் திட்டம் உள்ளது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "DSLP/Deshalpur". India Rail Info.
- ↑ "Suresh Prabhu lays foundation stone for 8 rail projects in Gujarat". dnaindia.com. Retrieved 2019-12-23.
- ↑ "Surge by 300 per cent in allocation for Gujarat railways in 2 years, says Suresh Prabhu". The Indian Express. 8 June 2016. Retrieved 2019-12-23.
- ↑ "Rs 17,073 crore worth Railway projects in progress in state | Cities News". The Indian Express. 30 July 2016. Retrieved 2019-12-23.
- ↑ "Bhuj–Naliya broad-gauge rail line sanctioned". DeshGujarat. 16 October 2008. Retrieved 2019-12-23.
- ↑ "STRUCTURE OF RAILWAY ACCOUNTS" (PDF). Indian Railways.
- ↑ "Bhuj-Naliya Railway Track on Ahmedabad Division under final Testing Phase". RailNews.in.