தேங்காய்பட்டணம் ஆனப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேங்காய்பட்டணம் ஆனப்பாறை அல்லது ஆதாம் பாறை என்பது தமிழ்நாடு, குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை கிராமங்களில் ஒன்றான தேங்காய்பட்டணம் என்ற சுற்றுலாத் தளத்தில் கடற்கரையிலிருந்து சுமார் 250 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனப்பாறை கல்குவாரி மாபியாகளால் இன்று எண்பது சதவீதம் பாறையை இழந்து காட்சியளிக்கிறது. இங்கு அழகான நீர்சுனை காணப்படுகிறது. ஊசிக்கிணறு என்கிற இயற்கை நீரூற்று, பஸ், யானை போன்ற இயற்கை உருவமைப்புகள் கொண்ட பாறைகள் அண்மைக் காலத்தில் கல்குவாரி மாபியாகளால் அழிக்கப்பட்டது.

பெயர்க்காரணம்[தொகு]

இப்பாறைக்கு ஆனப்பாறை என்று பெயர் வர சில காரணங்கள் கூறப்படுகிறது. டச்சுப் படையெடுப்பின்போது டச்சுப்படை கடலிலிருந்து பார்த்தபோது மிகப்பெரிய யானைப்படை போருக்கு தயாராக நிற்பது போன்று இந்த பாறை காட்சியளித்தால் டச்சுப்படையினர் புறமுதுகிட்டு சென்றுவிட்டதால் ஆனப்பாறை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.