தெளிவான கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தெளிவான கனவு (LUCID DREAM) உறக்கநிலையில் ஒருவர் கனவு காணும்போது, தான் காண்பது கனவுதான் என்ற விழிப்புணர்வை கனவு காண்பவரிடம் ஏற்படுத்தும்[1].

கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் தாண்டி நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.

சாதாரண கனவுகள்[தொகு]

இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில்,நாம் உறங்கும் பொது நமக்கு வரும் ஒரு கனவில் நமக்கு எதிரே ஒரு புத்தகம் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். சாதாரண கனவுகள் மூலம் இந்த எடுத்துக்காட்டை கூற விளைந்தால், அடுத்து என்ன நாம் செய்வோம் என்பதை நமது ஆழ்மனது தான் நிர்ணயிக்கும் அந்த நொடிபொழுதில் நாமே நினைத்தாலும் நமது எண்ண ஆற்றலால் அந்த புத்தகத்தின் மீதோ அந்த கனவுலகின் பொருட்களின் மீதோ நம்மால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது இன்னும் கூற விளைந்தால் அந்த கனவு முடிந்து நாம் எழுந்த பின்பு தான் இப்படிப்பட்ட கனவை நாம் கண்டிருக்கிறோம் என்பதே தெரிய வரும்.

தெளிவான கனவுகள்[தொகு]

ஆனால், இந்த தெளிவான கனவுகள் வகையை சார்ந்து நாம் காணும் கனவுகளின் உள்ளே நம்மால் பிரயாணிக்க இயலும் , மேலும் நம்மால் நமது உடல் சார்ந்தோ இயக்க நிலையை சார்ந்தோ எந்த ஒரு எளிதான காரியங்களையும் செய்ய இயலும் ,ஏன் நாம் உறங்கும் போதே நம்மால் ஒரு இமாலய மலையின் மேல் நடந்து செல்வதை போன்ற உணர்வை கொண்டு வர இயலும் . நாம் மேற்கூறிய எடுத்துகாட்டை வைத்து பார்த்தோமேயானால் , நம்மால் நமது உறக்க நிலையில் இருந்து கொண்டே நாம் புத்தகம் சார்ந்த கனவை காண்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இயலும் , மேலும் அதே உறக்க நிலையில் இருந்து கொண்டே நம்மால் அந்த புத்தகத்தை திறந்து படிக்கச் நினைத்தால் அதுவும் சாத்தியமாகும் இந்த வகையான தெளிவான கனவில்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளிவான_கனவு&oldid=2068620" இருந்து மீள்விக்கப்பட்டது