தெளிப்பு நீர்ப் பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்

   நீரை சிக்கனமாக பயன்படுத்தவதற்கும், நீரின் பயன்படு திறனை அதிகரிக்கவும் தெளிப்பு நீர் பாசனம் அவசியம்.

செயல்கள்

   நிலத்தின் மேற்பரப்பில் குழாய் வழியாக வரும் நீரை மழை பெய்வது போல தெளிக்க செய்வது. நீரை தேவையான அழுத்தத்தில் செலுத்தி குழாயின் நுணியில் உள்ள தெளிப்பான் மூலமாக தெளிப்பது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்ற வட்டாரம் வரை நீரை தெளிக்கலாம்.

சிறப்பியல்புகள் 1) மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது. 2) மலைத்தோட்டம் பயிர்களான தேயிலை, காபி மற்றம் இதரப் பயிர்களுக்கு ஏற்றது. 3) நிலக்கடலை பருத்தி போன்ற முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றது.

பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்

1) தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம் ஆனாலும் இந்த அமைப்பானது குறைந்தது 10 வருடங்கள் நிலத்தில் நிரந்தரமாக இருக்கும். 2) நம் நாட்டில் விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகள். இவர்கள் குழுவாக இணைந்து இந்த அமைப்பை நிறுவிக் கொள்ளலாம். 3) காற்று அதிகமாக வீசும்போது அதனை மேற்பார்வையிட்டு காற்றின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்றவாறு தெளிப்பான்களை சரி செய்து கொள்ளலாம். 4) இந்த தெளிப்பானின் உபயோக முறைகளைப் பற்றி விவசாயிகள் சரியான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.