தெளிகுற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியக் குற்றவியல் சட்டத்தில் தெளிகுற்றம் (cognisable offence) என்ற வகைக்குள் குற்றம் என்று தெளிவாகத் தெரிந்துணரப்படக் கூடிய குற்றங்கள் அடங்கும். இக்குற்றங்களை இழைத்தோரை காவல்துறையினர் எவ்வித பிடி ஆணையும் (warrant) இன்றிக் கைது செய்யலாம்.

இவ்வகையில் அடங்கும் குற்றங்கள்[தொகு]

பிடி ஆணையின்றி ஒருவரைக் கைது செய்யக் கூடிய காரணங்கள்[தொகு]

  1. .பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றத்தினை ஒருவர் செய்திருக்கிறார் என்ற தகவல் அல்லது புகார் பெறப்பட்டாலோ நியாயமான சந்தேகங்கள் எழுந்தாலோ ,
  2. குடியிருப்பிடம் , தொழுகை இடம் , பொருட்கிடங்கு ஆகிய இடங்களில் குற்றம் புரிய தானே வழியமைத்து, அத்துமீறி நுழைவதற்கோ அல்லது குற்றம் புரிந்த பின் அவ்வழியே வெளியெறுவதற்கான கருவிகள் வைத்திருந்தாலோ ,
  3. அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆக இருந்தாலோ,
  4. . காவல் அலுவலரை கடமையை செய்யவிடாமல் தடுத்தாலோ,
  5. . திருட்டு சொத்து வைத்திருந்தாலோ ,
  6. . சட்டப்படியான காவலில் இருந்து தப்பி ஒடியிருந்தாலோ,
  7. காலாட்படை, கப்பற்படை, விமான படையில் பணியைத் துறந்து ஒடிவந்திருந்தாலோ ,
  8. வெளிநாட்டிலிருக்கும்போது நாடு கடத்தல் சட்டத்தின்படியான குற்றத்தை செய்திருந்தாலோ,
  9. நிபந்தனைக்குப்பட்டு விடுவிக்கப்பட்ட தண்டனைக் கைதி, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினாலோ ,
  10. பிடி ஆணையின்றி கைது செய்வதற்குறிய குற்றம் செய்வதற்குறிய குற்றம் செய்துள்ளார் என்ற் சந்தெகத்தில், வேறு ஒரு காவல் நிலைய அதிகாரி ஒரு நபரை கைது செய்யக் கோரினாலோ, ஒருவரைப் பிடி ஆணையின்றி கைது செய்யலாம்.

ஒருவரை கைது செய்யும் முறைமை[தொகு]

காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்வதாகக் கூறியவுடன் வார்த்தையாலோ அல்லது செயலிலாலோ காவலில் வைக்கபடுபவர் பணிந்து விட்டால் கைது முழுமையடைகிறது. அப்போது கைது செய்வதற்கு அவரின் உடலைத் தொட வேண்டும் என்பது அவசியமில்லை.பெண்களை பொறுத்தமட்டில் , கைது செய்யப்படும்போது , கைதுக்குட்பட்டு அவர் ஒத்துக் கொண்டதாகவே காவல் துறையினரால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கண்முன்பு பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றம் இழைத்தவரையோ அல்லது தேடப்படும் குற்றவாளியையோ தனிநபர் யாரும் கைது செய்ய முடியும். ஆனால் உடனடியாக அக்குற்றவாளி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளிகுற்றம்&oldid=1362227" இருந்து மீள்விக்கப்பட்டது