தெல்வாக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்வாக்சைட்டுDelvauxite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCaFe4(PO4,SO4)2(OH)8•(4-6)H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள், பழுப்பு, அடர் பழுப்பு

தெல்வாக்சைட்டு (Delvauxite) என்பது CaFe4(PO4,SO4)2(OH)8•(4-6)H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும்[1]. போரிக்கைட்டு என்ற பெயராலும் இக்கனிமத்தை அழைக்கலாம். மஞ்சள் முதல் பழுப்பு, அடர் பழுப்பு நிறத்துடன் படிக உருவமற்று இது காணப்படுகிறது. சில நேரங்களில் திராட்சைக் கொத்து போன்ற பொதிகளாகவும் விழுதுப் பாறைகளாகவும் இது உருவாகிறது[2].

1838 ஆம் ஆண்டு பெல்சியம் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் தூமாண்ட் என்பவர் முதன் முதலாக தெல்வாக்சைட்டு என்ற கனிமத்தைக் கண்டறிந்தார். இதை யே.எசு.பி.யே. தெல்வாக்சு டி பென்ப் என்ற பெல்சியம் நாட்டு அறிஞருக்கு சமர்ப்பித்தார். பெர்னாவ், லீக், பெல்சியம், சிட்ரெதோசெசுக்கி, செக் குடியரசு போன்ற பகுதிகளில் தெல்வாக்சைட்டு கிடைக்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்வாக்சைட்டு&oldid=2939007" இலிருந்து மீள்விக்கப்பட்டது