தெல்லா அம்சா (நெல்)
Appearance
தெல்லா அம்சா (Tella Hamsa ) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், எச் ஆர் - 12 (HR-12) எனும் நெல் இரகத்தையும், டி என் 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், குளிர்ச்சியான காலநிலையை தாங்கும் திறனுடையது. ஒரு எக்டேருக்கு சுமார் 4000 - 5000 கிலோ (40-45 Q/ha)[2] மகசூல் தரவல்ல இவ்வகை நெற்பயிர், ஆந்திரப் பிரதேசத்தில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "rkmp.co.in |Extension Domain >> Karnataka >> Popular Varieties >>Tella Hamsa". Archived from the original on 2017-04-29. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 26.Tella Hamsa". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.