தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
Delmon University for Science & Technology
جامعة دلمون للعلوم والتكنولوجيا
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்2003
தலைவர்இரிபாவ அல் பாவோரி
தலைவர்ஆனி எலால்
துறைத்தலைவர்அகமத் அர்பாப்
அமைவிடம்,
இணையதளம்http://delmon.edu.bh

தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Delmon University for Science & Technology) பகுரைன் நாட்டின் தலைநகரமான மனாமாவில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும்.[1]

டாக்டர் அசன் அல் காதி 2003 ஆம் ஆண்டில் தெல்மோன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்[2]. பல்கலைக் கழகத்திற்கான அங்கீகாரம் 2004 ஆம் ஆண்டு சூலை 6 இல் வழங்கப்பட்டது. பண்டைய ஈராக் நாகரிகத்தின் மக்கள் பகுரைனில் கனிமப் பொருள்களுக்கு ஆதரமாக விளங்கிய இடங்களை தெல்மோன் அல்லது தில்மன் என்று அழைத்தனர். இப்பெயரை அடிப்படையாகக் கொண்டே பல்கலைக்கழகத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

பட்டப்படிப்புகளில் வணிக நிர்வாகம் தொடர்பான இளங்கலை படிப்புகளும் இப்பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருந்தன[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

.