தெலூரைடு
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 22541-49-7 | |
| ChEBI | CHEBI:30453 |
| ChemSpider | 19241429 |
Gmelin Reference
|
6498 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Te2− | |
| வாய்ப்பாட்டு எடை | 127.60 g·mol−1 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | சல்பைடு, செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தெலூரைடு (Telluride) என்பது Te2− என்ற எதிர்மின் அயனியும் இதன் வழிப்பெறுதிகளும் ஆகும். இது மற்ற சால்கோசனைடு எதிர்மின் அயனிகளான இலேசான O2−, S2− மற்றும் Se2− மற்றும் கனமான Po2− ஆகியவற்றுடன் ஒத்திருக்கிறது.[1]
கொள்கையளவில், Te2− தெலூரியத்தின் இரண்டு-e− குறைப்பால் உருவாகிறது. இதன் குறைப்பு மின்னழுத்த ஆற்றல் −1.14 வோல்ட்டு ஆகும்.[2]
- Te(s) + 2 e− ↔ Te2−
தெலூரைடு ஈரெதிர்மின் அயனியின் கரைசல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், பைதெலூரைடின் (TeH−) கரையக்கூடிய உப்புகள் அறியப்படுகின்றன.[3]
கரிமத் தெலூரைடுகள்
[தொகு]தெலூரைடுகள் Te2− அயனியிலிருந்து முறையாகப் பெறப்பட்ட கரிமத்தெலூரியம் சேர்மங்களின் ஒரு குழுவையும் விவரிக்கின்றன. தெலூரைடு உப்புகளின் மெத்திலேற்ற வினையின் விளைவாக உருவாகும் இருமெத்தில் தெலூரைடு ஓர் எடுத்துக்காட்டு உறுப்பினர் ஆகும்:
- 2 CH3I + Na2Te → (CH3)2Te + 2 NaI
தெலூரியம் உட்கொள்ளப்படும்போது உடலில் இருமெத்தில் தெலூரைடு உருவாகிறது. இத்தகைய சேர்மங்கள் பெரும்பாலும் தெல்லூரோயீத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை கட்டமைப்பு ரீதியாக ஆக்சிசனை மாற்றும் தெலூரிய ஈதர்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. இருப்பினும் C–Te பிணைப்பின் நீளம் C–O பிணைப்பை விட மிக நீளமானது. C–Te–C கோணங்கள் 90 பாகைக்கு அருகில் இருக்கும்.[4]
கனிமத் தெலூரைடுகள்
[தொகு]பல உலோகத் தெலூரைடுகள் அறியப்படுகின்றன. அவற்றில் சில தெலூரைடு தாதுக்களாக உள்ளன. . இவற்றில் கலவெரைட்டு மற்றும் கிரென்னரைட்டு (AuTe2) போன்ற இயற்கை தங்க தெலூரைடுகளும் சில்வனைட்டு கனிமமும் (AgAuTe4) அடங்கும். இவை தங்கத்தின் சிறிய தாதுக்கள் என்றாலும் தங்கத்தின் முக்கிய இயற்கையாகத் தோன்றும் சேர்மங்களாகும். பிசுமத்தைட்டு மால்டோனைட்டு (Au2Bi) மற்றும் ஆண்டிமோனைடு ஆரோசிடைபைட்டு (AuSb2) போன்ற தங்கத்தின் வேறு சில இயற்கை சேர்மங்களும் அறியப்படுகின்றன. இத்தகைய பொருட்களில் பிணைப்பு பெரும்பாலும் சகப்பிணைப்பு என்றாலும், அவை Te2− அயனியின் உப்புகள் என்று சாதாரணமாக விவரிக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி, Ag2Te சேர்மம் Ag+ மற்றும் Te2− அயனிகளிலிருந்து பெறப்படுகிறது. சங்கிலிகளுடன் இணைந்த Te எதிர்மின்னயனிகள் பாலி தெலூரைடுகளின் வடிவத்தில் அறியப்படுகின்றன. இவை தெலூரைடு ஈரெதிர்மின் அயனியை தனிம Te உலோகத்துடன் வினைபுரிவதன் மூலம் உருவாகின்றன:
- Te2- + n Te → Ten+12-
பயன்பாடுகள்
[தொகு]காட்மியம் தெலூரைடின் ஒளிமின்னழுத்தப் பயன்பாட்டைத் தவிர தெலுரைடுகளுக்கு பெரிய அளவிலான பயன்பாடுகள் எதுவும் இல்லை.[5] பிசுமத் தெலூரைடு மற்றும் ஈயத் தெலூரைடு இரண்டும் விதிவிலக்கான வெப்ப மின் பொருட்களாகும்.[6][7] இந்த வெப்ப மின் பொருட்களில் சில வணிகமயமாக்கப்பட்டுள்ளன.[8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
- ↑ "Standard Reduction Potentials" பரணிடப்பட்டது 2013-02-28 at the வந்தவழி இயந்திரம், Indiana University.
- ↑ Houser, Eric J.; Rauchfuss, Thomas B.; Wilson, Scott R. (1993). "Synthetic and structural studies on (RC5H4)4Ru4E40/2+ (E = sulfur, selenium, tellurium): Mobile metal-metal bonds within a mixed-valence ruthenium (IV)/Ruthenium(III) cluster". Inorganic Chemistry 32 (19): 4069–4076. doi:10.1021/ic00071a017.
- ↑ Reid, G., et al. Journal of Organometallic Chemistry, 642 (2002) 186– 190.
- ↑ Wu, Xuanzhi (2004). "High-efficiency polycrystalline Cd Te thin-film solar cells". Solar Energy 77 (6): 803–814. doi:10.1016/j.solener.2004.06.006. Bibcode: 2004SoEn...77..803W. https://archive.org/details/sim_solar-energy_2004_77_6/page/n152.
- ↑ Lalonde, Aaron D.; Pei, Yanzhong; Wang, Heng; Jeffrey Snyder, G. (2011). "Lead telluride alloy thermoelectrics". Materials Today 14 (11): 526–532. doi:10.1016/S1369-7021(11)70278-4.
- ↑ Goldsmid, H. (2014). "Bismuth Telluride and Its Alloys as Materials for Thermoelectric Generation". Materials 7 (4): 2577–2592. doi:10.3390/ma7042577. பப்மெட்:28788584. Bibcode: 2014Mate....7.2577G.
- ↑ "Laird Thermo-electric".
- ↑ "TeTech".
- ↑ "Marlow".