தெலூரியம் டெட்ராபுளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
தெலூரியம்(IV) புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 15192-26-4 | |
| ChEBI | CHEBI:30468 |
| ChemSpider | 146333 |
Gmelin Reference |
25977 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 167258 |
| |
| பண்புகள் | |
| TeF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 203.594 |
| தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
| உருகுநிலை | 129 °C (264 °F; 402 K) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் |
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தெலூரியம் டெட்ராபுளோரைடு (Tellurium tetrafluoride) என்பது TeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிலைப்புத்தன்மை கொண்டு வெள்ளை நிறத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சும் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. அறியப்பட்டுள்ள இரண்டு தெலூரியம் புளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தெலூரியம் அறுபுளோரைடு மற்றொரு தெலூரியம் புளோரைடாகும்.[1] பரவலாகக் காணப்படும் இருதெலூரியம் பதின்புளோரைடு சேர்மம் F5TeOTeF5 என்ற கட்டமைப்பில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[1] புளோரின் கொண்ட மற்ற தெலூரியம் சேர்மங்களும் உள்ளன. ஆனால் குறிப்பிடப்பட்ட இந்த இரண்டு சேர்மங்கள் மட்டுமே தெலூரியம் மற்றும் புளோரினை மட்டும் கொண்டவையாக உள்ளன. தெலூரியம் டைபுளோரைடும் (TeF2) இருதெலூரியம் இருபுளோரைடும் (Te2F2) அறியப்படவில்லை.[1]
தயாரிப்பு
[தொகு]தெலூரியம் டையாக்சைடை கந்தக டெட்ராபுளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தெலூரியம் டெட்ராபுளோரைடைத் தயாரிக்கலாம்:
- TeO2 + 2SF4 → TeF4 + 2SOF2
நைட்ரைல் புளோரைடை தெலூரியத்துடன் அல்லது 0 ° செல்சியசு வெப்பநிலையில் தெலூரியம் மற்றும் புளோரின் தனிமங்களை வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது செலீனியம் டெட்ராபுளோரைடை தெலூரியம் டையாக்சைடுடன் 80 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமோ இது தயாரிக்கப்படுகிறது.
வினைகள்
[தொகு]தெலூரியம் டெட்ராபுளோரைடு நீர் அல்லது சிலிக்காவுடன் வினைபுரிந்து தெலூரியம் ஆக்சைடுகளை உருவாக்குகிறது. தாமிரம், வெள்ளி, தங்கம் அல்லது நிக்கல் ஆகியவை 185 °செல்சியசு வெப்பநிலையில் தெலூரியம் டெட்ராபுளோரைடுடன் வினைபுரியும். பிளாட்டினத்துடன் இச்சேர்மம் வினைபுரிவதில்லை.
பண்புகள்
[தொகு]தெலூரியம் டெட்ராபுளோரைடு 130 °செல்சியசு வெப்பநிலையில் உருகும். 194 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து தெலூரியம் அறுபுளோரைடாக மாறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Inorganic Chemistry,Egon Wiberg, Arnold Frederick Holleman Elsevier 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- R.B. King; Inorganic Chemistry of Main Group Elements, VCH Publishers, New York, 1995.
- W.C. Cooper; Tellurium, VanNostrand Reinhold Company, New York, 1971.