உள்ளடக்கத்துக்குச் செல்

தெலூரியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரியம் அயோடைடு
Tellurium iodide
இனங்காட்டிகள்
12600-42-9
பண்புகள்
TeI
தோற்றம் சாம்பல்நிறத் திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இருதெலூரியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் செலினியம் ஓருகுளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் தெலுரியம் நான்கயோடைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

தெலூரியம் அயோடைடு (Tellurium iodide) என்பது TeI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு வடிவங்களில் இச்சேர்மம் அறியப்படுகிறது. இவற்றிம் அமைப்பு தெலூரியத்தின் மற்ற ஒராலைடுகளிடமிருந்து வேறுபடுகின்றன. தெலூரியத்தின் மூன்று துணை ஆக்சைடுகள் α-TeI, β-TeI, மற்றும் Te2I, தவிர மேலுமொரு தெலூரியம் நான்காக்சைடு ஆகியன அறியப்படுகின்றன[1].

தயாரிப்பு மற்றும் பண்புகள்

[தொகு]

தெலூரியம் உலோகம், அயோடின் மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைச் சேர்த்து நீர்வெப்ப வினையினால் இச்சாம்பல் நிற தெலூரியம் அயோடைடைத் தயாரிக்கலாம். வினை 270 ° செல்சியசு வெப்பநிலையில் முச்சரிவு அமைப்புள்ள α-TeI வகை உருவாகிறது. இதே கலவை 150 ° செல்சியசு வெப்பநிலையில் ஒற்றைச்சரிவு சிற்றுறுதி நிலை β-Te வடிவமும் தோன்றுகிறது[2] . இச்சேர்மங்கள் அமைப்பு ரீதியாக Te2I இன் அமைப்பை ஒத்துள்ளன ஆனால், கூடுதலான அயோடைடு தொகுதிகள் மற்ற தெலூரியம் மையங்களுடன் பாலமாக இணையவில்லை.

தொடர்புடைய ஒற்றைக்குளோரைடு மற்றும் ஒற்றை புரோமைடுகள் Te2X2 என்ற பொது வாய்ப்பாட்டுடன் காணப்படுகின்றன[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Zhengtao Xu "Recent Developments in Binary Halogen–Chalcogen Compounds, Polyanions and Polycations" in Handbook of Chalcogen Chemistry: New Perspectives in Sulfur, Selenium and Tellurium, Francesco Devillanova, Editor, 2006, RSC. pp. 381-416. Royal Society எஆசு:10.1039/9781847557575-00455
  2. ↑ R. Kniep, D. Mootz, A. Rabenau "Zur Kenntnis der Subhalogenide des Tellurs" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1976, Volume 422, pages 17–38. எஆசு:10.1002/zaac.19764220103
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_அயோடைடு&oldid=1931361" இலிருந்து மீள்விக்கப்பட்டது