தெலூரிக்கு வெள்ளி
தோற்றம்
| தெலூரிக்கு வெள்ளி | |
|---|---|
சுடூயட்சைட்டு மற்றும் வெண்கந்தகம் (சோனோரா, மெக்சிகோ) | |
| வகை | கனிமம் |
தெலூரிக்கு வெள்ளி (Telluric silver) என்பது ஒரு வழக்கற்றுப் போன பெயராகும். சேகரிப்பாளர்கள் மற்றும் கனிம வர்த்தகர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், புவியியலாளர்கள் மற்றும் பிற பயன்பாட்டுத் தொழில்களின் பிரதிநிதிகள் இதை வெள்ளியின் தெலூரைடு தாது என்கின்றனர்.[1]:338 மேலும் இதை ஒத்த உட்கூறுகள் கொண்ட கலவையின் வேதியியல் சேர்மமாகவும் கருதுகின்றனர்.[2] தெலூரிக் வெள்ளி பின்வருவனவற்றையும் குறிக்கலாம்:
கனிமவியல்
[தொகு]- தெலூரிக்கு வெள்ளி அல்லது தெலூரிக்கு வெள்ளி கிளான்சு - எசைட்டு கனிமம், ஓர் அரிய தாது கனிமமான வெள்ளி தெலூரைடு. மேற்கு அல்தாயின் சுரங்கங்களில் 1829 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.
- தெலூரிக்கு வெள்ளி அல்லது தெலூரிக்கு வெள்ளி-தங்கக் கிளான்சு- பெட்சைட்டு, எசைட்டு கனிமத்திற்கு நெருக்கமான ஓர் அரிய தாது கனிமமாகும். வெள்ளி மற்றும் தங்கத்தின் கலவையான தெலூரைடும் ஆகும்.
- தெலூரிக்கு வெள்ளி (அரிதானது) அல்லது தெலூரிக் வெள்ளி கிளான்சு - சில்வனைட்டு ,தங்கம் மற்றும் வெள்ளி தெலூரைடு கலந்த ஓர் அரிய தாது கனிமம். முதன்முதலில் டிரான்சில்வேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரிடப்பட்டது
- தெலூரிக்கு வெள்ளி (அரிதானது) அல்லது தெலூரிக்கு வெள்ளி பிளெண்டு- எம்பிரெசைட்டு, ஓர் அரிய தாது கனிமம். இந்த கலவையில் வெள்ளி தெலூரைடும் உள்ளது. 1914 ஆம் ஆண்டு கொலராடோவின் எம்பிரசு இயோசபின் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.
- தெலூரிக்கு வெள்ளி (அரிதானது) - சுடூயட்சைட்டு, அரிய தாது கனிமமான இதில் வெள்ளி தெலூரைடும் உள்ளது. 1951 ஆம் ஆண்டு சாகாரம்பே சுரங்கத்திலிருந்து (ருமேனியா) ஓர் அருங்காட்சியக கனிம மாதிரியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.
படக்காட்சியகம்
[தொகு]-
எசைட்டு
-
சில்வனைட்டு
வேதியியலில்
[தொகு]- தெலூரிக்கு வெள்ளி - வெள்ளி தெலூரைடு, வெள்ளி மற்றும் தெலூரியத்தின் இருபடி கனிமக் கலவை. AgTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய வெளிர் பழுப்பு நிறப் படிகங்கள், - நிபந்தனையுடன் எம்பிரெசைட்டு கனிமத்துடன் ஒத்திருக்கிறது.
- தெலூரிக்கு வெள்ளி - வெள்ளி தெலூரைடு, வெள்ளி மற்றும் தெலூரியத்தின் இருபடி கனிமக் கலவை, Ag2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய சாம்பல் அல்லது கருப்பு படிகங்கள், - நிபந்தனையுடன் எசைட்டு கனிமத்துடன் ஒத்திருக்கிறது.
- தெலூரிக்கு வெள்ளி - பெண்டாவெள்ளி டிரைதெலூரைடு, வெள்ளி மற்றும் தெலூரியத்தின் இருபடி கனிமக் கலவை, Ag5Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய கருமையான படிகங்கள், - நிபந்தனையுடன் கனிம சுடூயட்சைட்டுடன் ஒத்திருக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Krivovichev V. G. Mineralogical glossary. Scientific editor A. G. Bulakh. — St.Petersburg: St.Petersburg Univ. Publ. House. 2009. 556 p. — ISBN 978-5-288-04863-0
- ↑ Genth, F. A. (1868-05-01). "Contributions to mineralogy; No. VII". American Journal of Science s2-45 (135): 305–321. doi:10.2475/ajs.s2-45.135.305. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9599. http://dx.doi.org/10.2475/ajs.s2-45.135.305.