தெலுங்குப்பாளையம் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலுங்குப்பாளையம் வைத்தியசாலை
அமைவிடம் போரூர் சாலை, தெலுங்குப்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மருத்துவப்பணி எலும்பு முறிவு, இளம்பிள்ளை வாதம்
வகை சித்த மருத்துவமனை
நிறுவல் 1949
வலைத்தளம் தெலுங்குப்பாளையம் வைத்தியசாலை
பட்டியல்கள்

தெலுங்குப்பாளையம் மருத்துவமனை அல்லது தெலுங்குப்பாளையம் வைத்தியசாலை என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம் கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பாரம்பரிய சித்த மருத்துவமனையாகும். இது எலும்பு முறிவு, இளம்பிள்ளை வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையாகும். [1]

வரலாறு[தொகு]

இந்த மருத்தவமனை 1949 ஆம் ஆண்டு குஜராத்தின், பாவ்நகர் மகாராணியால் தொடங்கப்பட்டது. கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் தன்வந்திரி மருத்துவமனையைப் போல, தமிழ்நாட்டில் பரம்பரை வைத்தியசாலையாக உருவானது இந்த மருத்துவமனை. கேரளத்தில் புகழ்பெற்று விளங்கும் ஆர்ய வைத்தியசாலையை ஒரு குடும்பம் பாரம்பரியமாக நடத்திவருவதைப்போல், வி. அர்ச்சுனன் என்பவரின் குடும்பத்தினர் பரம்பரையாக இந்த மருத்துவ மனையை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையின் சிறப்பு[தொகு]

மற்ற மருத்துவமனைகள், மருத்துவர்களால் கைவிடப்பட்ட, எலும்பு முறிவு நோயாளிகள், இளம்பிள்ளை வாதம், வாதம், பக்க வாதம் போன்ற நோயாளிகளுக்கும், நரம்பு பிடிப்பு, ரத்தக்கட்டு, பிறவி ஊனம், கூன், ஜன்னி உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் ஒரு காலத்தில் புகழ்வாய்ந்ததாக இந்த மருத்துவமனை இருந்தது. இங்கு பல பிரபலங்கள் சிகிச்சை பெற்றுள்ளார்கள், புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர் விஜய் மர்ச்சென்ட்டின் முதுகு எலும்பு முறிவுக்கும், ஆச்சார்ய கிருபளானியின் முழங்கால் எலும்பு முறிவுக்கும் இங்கு சிகிட்சை எடுத்துக்கொண்டுள்ளனர் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, எகிப்து, ஆப்ரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வந்து இங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள். இந்த மருத்துவமனையில் தயாரிக்கப்படும் மூலிகை எண்ணெய் இதன் தனிச்சிறப்பு இந்த என்னை இப்போதும் வெளிநாடுகளுக்கு செல்கிறது. அக்காலத்தில் காமராஜருக்கும் கிருபானந்த வாரியாருக்கும் இங்கிருந்துதான் கை, கால் வலிக்கு எண்ணெய் சென்றுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telungupalayam Hospital". Telungupalayam Hospital. பார்த்த நாள் 25 பெப்ரவரி 2017.
  2. கா.சு. வேலாயுதன் (2017 பெப்ரவரி 25). "பரம்பரை மருத்துவப் பெருமை சொல்லும் தெலுங்குப்பாளையம் மருத்துவமனை". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 25 பெப்ரவரி 2017.