உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு பப்புவா

ஆள்கூறுகள்: 6°30′S 139°30′E / 6.500°S 139.500°E / -6.500; 139.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு பப்புவா
South Papua
Province of South Papua
Provinsi Papua Selatan
அசுமத் பழங்குடியினரின் சிற்பக் கலை
அசுமத் பழங்குடியினரின்
சிற்பக் கலை
அலுவல் சின்னம் தெற்கு பப்புவா
சின்னம்
தெற்கு பப்புவா அமைவிடம்
Map
தெற்கு பப்புவா is located in இந்தோனேசியா
தெற்கு பப்புவா
      தெற்கு பப்புவா மாநிலம்

ஆள்கூறுகள்: 6°30′S 139°30′E / 6.500°S 139.500°E / -6.500; 139.500
நாடு இந்தோனேசியா
பகுதி மேற்கு நியூ கினி
மாநிலம்தெற்கு பப்புவா
நிறுவல்25 சூலை 2022[1]
தலைநகரம்சாலோர்
பரப்பளவு
 • மொத்தம்1,17,849.16 km2 (45,501.82 sq mi)
உயர் புள்ளி
10,085 m (33,087 ft)
மக்கள்தொகை
 (31 திசம்பர் 2024)[3][4]
 • மொத்தம்5,62,220
 • அடர்த்தி4.8/km2 (12/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[5]அசுமாட், கொம்பாய், கோரவாய் மக்கள், மாரிந்த், மாவோரி, சாவி, வம்போன், ஜாவானியர், வேறு
 • சமயம் (2023)[6]
 • மொழிகள்இந்தோனேசியம், அசுமாட், போயாசி, சித்தாக், கோலொப்பாம், கோரோவாய், மாரிந்த், மொம்போம், முயூ, வம்போன், யகாய்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
தொலைபேசி0902; 0971; 0975
போக்குவரத்துPS
HDI (2024)Increase 0.689 (2024)[8]
 - வளர்ச்சி[9] மத்திமம் [10]
இணையதளம்papuaselatan.go.id

தெற்கு பப்புவா மாநிலம் (இந்தோனேசியம்: Provinsi Papua Selatan; ஆங்கிலம்: Province of South Papua) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியா, மேற்கு நியூ கினியின், தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்.[11] மேற்கு நியூ கினி நிலப் பகுதி இந்தோனேசிய நியூ கினி அல்லது இந்தோனேசிய பப்புவா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மாநிலம், 2022-ஆம் ஆண்டில் பப்புவா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.[12] இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ சூலை 25, 2022 அன்று கையெழுத்திட்ட 2022 ஆம் ஆண்டின் சட்ட எண் 14-இன் அடிப்படையில், மேல்நில பப்புவா மற்றும் மத்திய பப்புவா ஆகிய மாநிலங்களில் இருந்து பப்புவா மாநிலம் தனி ஒரு மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தெற்கு பப்புவா மாநிலமும் உருவாக்கப்பட்டது.[13]

2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 513,617 ஆக இருந்தது.[14][2]2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 542,075 ஆக இருந்தது. (281,466 ஆண்கள் மற்றும் 260,609 பெண்கள்). 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள்தொகை 562220 ஆக உயர்ந்தது. இந்தோனேசியாவின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இந்தத் தெற்கு பப்புவா மாநிலம் அறியப்படுகிறது.[4]

பொது

[தொகு]

இந்த மாநிலத்தின் கிழக்கில் தனி நாடான பப்புவா நியூ கினி; வடக்கு - வடமேற்குப் பகுதிகளில் மேல்நில பப்புவா மற்றும் மத்திய பப்புவா மாநிலங்கள், நில எல்லைகளாக அமைகின்றன. அதே வேளையில், மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அரபுரா கடலை (Arafura Sea) இந்த மாநிலம் எதிர்கொள்கிறது. அரபுரா கடல், ஆஸ்திரேலியா - இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளின் கடல் எல்லையாக அமைகிறது.

இந்த மாநிலம் 117,849.16 கிமீ2 நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் சாலோர் (Salor Indah). தெற்கு பப்புவாவின் பொருளாதார மையமாக மெராக்கே (Merauke) நகரம் செயல்படுகிறது.[15]

வசூர் தேசிய பூங்கா

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1971 1,60,727—    
1980 1,72,662+7.4%
1990 2,43,722+41.2%
2000 2,91,680+19.7%
2010 4,09,735+40.5%
2020 5,13,617+25.4%
2024 5,42,075+5.5%
Source: (இந்தோனேசிய புள்ளிவிவரங்கள்)

தெற்கு பப்புவா மாநிலம், அதிக அளவில் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. அதன் காரணமாக, இந்த மாநிலத்தில் தாழ்வான பகுதிகள் அதிகமாக உள்ளன. திகுல் ஆறு மற்றும் மாரோ ஆறு போன்ற பெரிய ஆறுகள் இந்த மாநிலத்தைக் கடந்து செல்கின்றன. இந்த பகுதியில் அசுமத் (Asmat), மாரிந்த் (Marind), முயூ (Muyu) மற்றும் கொரோவாய் (Korowai) பழங்குடிகள் வசிக்கின்றனர். சவ்வரிசி மற்றும் மீன் போன்ற உணவு வகைகள் இவர்களின் முக்கிய உணவுப் பொருள்களாக உள்ளன.

மத்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற இடமாற்றுத் திட்டத்தின் கீழ், ஏராளமான சதுப்பு நிலங்களை நெல் வயல்களாக மாற்றவும்; மக்கள்தொகையை அதிகரிக்கவும்; ஜாவானியர்களைப் போன்று ஏராளமான மக்கள் இந்த மாநிலத்திற்குள் புலம்பெயர்கின்றனர்.

தெற்கு பப்புவாவில் புகழ்பெற்ற வசூர் தேசிய பூங்காவும் (Wasur National Park) உள்ளது. இந்தப் பூங்கா வாலாபி, மேடு கட்டும் கறையான்கள்; மற்றும் சந்திரவாசி எனும் சொர்க்கப் பறவைகள் உள்ளிட்ட வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட ஓர் ஈரநிலப் பகுதியாகும்.[16][17]

நிலவியல்

[தொகு]
தெற்கு பப்புவா பிராந்தியங்கள்

தெற்கு பப்புவா மாநில பிராந்தியங்கள்

[தொகு]

தெற்கு பப்புவா மாநிலம் 4 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது.

  1. மெராக்கே பிராந்தியம் (Merauke Regency)
  2. போவன் டிகோயல் பிராந்தியம் (Boven Digoel Regency)
  3. மாப்பி பிராந்தியம் (Mappi Regency)
  4. அசுமத் பிராந்தியம் (Asmat Regency)

வரலாறு

[தொகு]
மாரிந்த் பழங்குடிகள் (1920)
பப்புவா பழங்குடிகள் (1938)
அசுமத் பழங்குடிகள் (2018)
கிறிஸ்தவ குழுப் பாடல் போட்டி (2023)

தலை வேட்டை

[தொகு]

இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினி பகுதிக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு, தெற்கு பப்புவாவின் சதுப்புநிலப் பகுதி பழங்குடியினர் பலரின் வாழ்விடமாக இருந்தது. இந்தப் பழங்குடியினரில் அசுமாட், மாரிந்த் மற்றும் வம்போன் ஆகியோர் அடங்குவர். அவர்கள் இன்னும் அந்தப் பகுதியில் தங்களின் மூதாதையர் மரபுகளைப் பராமரித்து வருகின்றனர்.

மாலிந்த் (Malind) என்றும் அழைக்கப்படும் மாரிந்த் பழங்குடிகள், மெராக்கே பகுதியில் உள்ள ஆறுகளில் குழுக்களாக வாழ்ந்தனர். மேலும் அவர்களின் வாழ்க்கை முறை வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் வேளாண்மையை மையமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், மாரிந்த் பழங்குடியினர் தலை வேட்டை நடைமுறைக்குப் பெயர் பெற்றவர்கள்.

மாரிந்த் பழங்குடியினர், ஆறுகள் மற்றும் கடற்கரை வழிகளில் படகுகளின் மூலமாகத் தொலைதூர குடியிருப்புகளுக்குச் செல்வார்கள். அங்குள்ள குடியிருப்பாளர்களின் தலைகளைத் துண்டிப்பார்கள். துண்டிக்கப்பட்ட தலைகள் பாதுகாக்கப்பட்டு, பின்னர் கொண்டாடப்படுவதற்காக அவர்களின் கிராமங்களுக்குத் எடுத்துச் செல்லப்படும்.[18][19][20]

கத்தோலிக்க திருச்சபை

[தொகு]

19-ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகள் பப்புவா தீவை குடியேற்றவியப் பகுதிகளாக மாற்றத் தொடங்கின. அந்த வகையில் பப்புவா தீவு ஒரு நேர்கோட்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு பகுதி இடச்சு நியூ கினியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது; கிழக்குப் பகுதி இங்கிலாந்து எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது. மாரிந்த் பழங்குடியினர் தலை வேட்டைக்குச் செல்வதற்காக இந்த எல்லையையும் அடிக்கடி கடந்தனர்.

எனவே 1902-ஆம் ஆண்டில், தெற்கு பப்புவாவின் கிழக்குப் பகுதியில் எல்லையை வலுப்படுத்தவும்; தலை வேட்டை மரபை ஒழிக்கவும் ஓர் இராணுவத் தளத்தை இடச்சுக்காரர்கள் நிறுவினர். இந்தத் தளம் மாரோ ஆற்றுக் கரையில் (Maro River) அமைக்கப்பட்டது. தளத்தைச் சுற்றி இருந்த பகுதிக்கு மெராக்கே என்று பெயரிடப்பட்டது.

இடச்சுக்காரர்கள் தங்களின் மதத்தைப் பரப்புவதற்கும், தலை வேட்டை நடைமுறையை ஒழிப்பதற்கும், அந்தப் பகுதியில் கத்தோலிக்கப் பணிகளை மேற்கொண்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட பகுதி, படிப்படியாக வளர்ச்சி பெற்று ஒரு நகரமாக மாறியது. பின்னர் தெற்கு நியூ கினியின் தலைநகராகவும் மாறியது. இடச்சு குடியேற்றவிய காலத்தில், நெல் வயல்களைத் திறப்பதற்காக ஜாவானியர்களும் மெராக்கேவிற்கு அழைத்து வரப்பட்டனர்.[18][20]

போக்குவரத்து

[தொகு]
மோபா வானூர்தி நிலையம் (2021)
மெராக்கே-எரம்பு செப்பனிடப்படாத சாலையில் சிக்கிக் கொண்ட பேருந்து (2017)
வில்டர்மேன் ஆற்றில் சிக்கிக் கொண்ட படகு (2017)

வான்வழிப் போக்குவரத்து

[தொகு]

தெற்கு பப்புவா மாநிலத்தில், வானூர்திப் போக்குவரத்து என்பது ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஏனெனில் அதன் விரிவான நிலப்பரப்பு; பிராந்தியங்களுக்கு இடையிலான பரந்த தொலைவு; மற்றும் குறைந்த நிலப் போக்குவரத்தைக் கொண்ட உள்கட்டமைப்பு; ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

தெற்கு பப்புவாவில் உள்ள பிராந்தியத் தலைநகரங்கள்; பின்வருமாறு அவற்றின் சொந்த வானூர்தி நிலையங்களைக் கொண்டுள்ளன:[21]

  • மெராக்கே - மோபா வானூர்தி நிலையம்
  • மாப்பி - கெபி வானூர்தி நிலையம்
  • அஸ்மத் - எவர் வானூர்தி நிலையம்
  • போவன் டிகோயல் - தானா மேரா வானூர்தி நிலையம்

கூடுதலாக, சில மாவட்டத் தலைநகரங்கள் மூன்றாம் நிலை வானூர்தி நிலையங்களையும் கொண்டுள்ளன. மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சேவை செய்யும் குறைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சிறிய வானூர்தி நிலையங்கள் உள்ளன.[22]

தரைவழிப் போக்குவரத்து

[தொகு]

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்கு பப்புவாவில் நிலவழிச் சாலைகள் சிறப்பாக இல்லை. தெற்கு பப்புவாவின் நான்கு பிராந்தியங்களில், மெராக்கே பிராந்தியம்; மற்றும் போவன் டிகோயல் பிராந்தியம் மட்டுமே டிரான்ஸ்-பப்புவா நெடுஞ்சாலையால் (Trans-Papua Highway) இணைக்கப்பட்டுள்ளன.

மாப்பி பிராந்தியம் மற்றும் அசுமத் பிராந்தியம் ஆகிய இரு பிராந்தியங்களையும் கடல் மற்றும் வான் வழிகள் வழியாக மட்டுமே அணுக முடியும். தெற்கு பப்புவாவில் பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மெராக்கே நகரில் இருந்து பிற மாவட்டங்களுக்கான முன்னோடி வழித்தடங்களில் சேவை செய்யும் பெரு டாம்ரி பேருந்துகள் உள்ளன.[23][24][25]

நீர்வழிப் போக்குவரத்து

[தொகு]

தெற்கு பப்புவா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில், நீர் போக்குவரத்துத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்திற்குள் போக்குவரத்து இணைப்புகளை எளிதாக்குகிறது; மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கும் உதவுகிறது.

மெராக்கே துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும். பெரிய அளவிலான பயணிகள் கப்பல்கள்; மற்றும் வணிகக் கப்பல்கள் இரண்டிற்கும் சேவை செய்கிறது.[26]

நியூ கினி

[தொகு]

நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jimar, Syarif. "Melihat Kota Terpadu Mandiri Salor, Pusat Pemerintahan Provinsi Papua Selatan" இம் மூலத்தில் இருந்து 2023-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230204130336/https://papua.tribunnews.com/amp/2023/02/02/melihat-kota-terpadu-salor-pusat-pemerintahan-provinsi-papua-selatan. 
  2. 2.0 2.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Selatan Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.93)
  3. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Sulawesi Barat Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.76)
  4. 4.0 4.1 "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (visual). www.dukcapil.kemendagri.go.id. Retrieved 2 February 2025.
  5. Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Hasbullah, M Sairi; Handayani, Nur Budi; Pramono, Agus (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. ISBN 978-981-4519-87-8. P. 102.
  6. Sulawesi Barat Dalam Angka 2016, BPS
  7. "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2022" (visual). www.dukcapil.kemendagri.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 31 July 2022.
  8. "Indeks Pembangunan Manusia 2024". Statistics Indonesia. Retrieved 31 October 2024.
  9. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
  10. "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. Retrieved 16 November 2024.
  11. Aditra, Irsul Panca (2022-04-07). Agriesta, Dheri (ed.). "RUU Pemekaran Provinsi di Papua Disetujui, Ketua Tim PPS Tolak Usulan Nama Provinsi Anim Ha". KOMPAS.com. Retrieved 2022-07-12.
  12. Santoso, Bangun; Ardiansyah, Novian (2022-06-30). "DPR Sahkan RUU DOB, Papua Kini Punya 3 Provinsi Baru: Papua Selatan, Papua Tengah Dan Papua Pegunungan". suara.com (in இந்தோனேஷியன்). Retrieved 2022-07-01.
  13. Utama, Felldy (2022-06-30). "Usai RUU DOB Papua Disahkan, Ini Perintah Mendagri Buat Bupati Papua Selatan: Okezone Nasional". Nasional Okezone. iNews. Jakarta: Okezone. Retrieved 2022-07-01.
  14. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  15. Jimar, Syarif (2023-02-02). "Melihat Kota Terpadu Mandiri Salor, Pusat Pemerintahan Provinsi Papua Selatan". Tribun-papua.com. https://papua.tribunnews.com/amp/2023/02/02/melihat-kota-terpadu-salor-pusat-pemerintahan-provinsi-papua-selatan. 
  16. Batbual, Agapitus (2015-10-21). "Kala Cendrawasih Terus jadi Incaran Pemburu". mongabay.co.id. Archived from the original on 2022-07-03. Retrieved 2022-07-03.
  17. Batbual, Agapitus (2014-09-03). "Walabi, Minyak Kayu Putih dari Taman Nasional Wasur". mongabay.co.id. Archived from the original on 2022-07-03. Retrieved 2022-07-03.
  18. 18.0 18.1 Daeli, Onesius Otenieli (2018). "Spiritualitas dan Transformasi". Melintas (Fakultas Filsafat UNPAR) 34 (1): 96–110. doi:10.26593/mel.v34i1.3087.96-110. https://journal.unpar.ac.id/index.php/melintas/article/view/3087. 
  19. Sinaga, Jaya; Fenetiruma, Raymond; Pelu, Handika (2021). "Pengangkatan Anak Adat dalam Suku Malind di Kabupaten Merauke" (in id). Jurnal Restorative Justice (Fakultas Hukum Universitas Musamus) 5 (1). doi:10.35724/jrj.v5i1.3621. https://ejournal.unmus.ac.id/index.php/hukum/article/download/3621/1975/. 
  20. 20.0 20.1 J.P.D.Groen (2022-01-25). "Pengayauan Marind". kombai.nl (in இந்தோனேஷியன்). Retrieved 2022-07-01.
  21. "Daftar Bandara". Kementerian Perhubungan Republik Indonesia.
  22. Irawan, Karina Isna; Daeng, Mohamad Final (2021). "Terbuai dalam Kesyahduan Hutan Korowai". jelajah.kompas.id. KOMPAS.
  23. Wopari, Theresia (2023-05-23). "Pembangunan Infrastruktur untuk Menaikkan Perekonomian Papua". radarsampit.jawapos.com. RADAR SAMPIT.
  24. LAPORAN KUNJUNGAN KERJA KOMISI V DPR RI KE KABUPATEN MERAUKE, PROVINSI PAPUA SELATAN RESES MASA PERSIDANGAN III 2022-2023 TANGGAL 17-21 FEBRUARI 2023 (PDF). Jakarta: Komisi V DPR RI. 2023.
  25. Mega Sari, Astini (2024-05-30). "Jadwal Kapal Pelni KM Tatamailau Terbaru Juni 2024, Lewati Bitung, Timika, Agats, Merauke". papua.tribunnews.com. Tribun Papua.
  26. Mega Sari, Astini (2023-04-13). "Jadwal Kapal KM Sabuk Nusantara Rute Merauke-Agats April 2023, Harga Mulai Rp 38 Ribuan". papua.tribunnews.com. Tribun Papua.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_பப்புவா&oldid=4234396" இலிருந்து மீள்விக்கப்பட்டது