தெற்கு செமிடிக் மொழிகள்
தெற்கு செமிடிக் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
வடக்கு எத்தியோப்பியா அல்லது தென்மேற்கு அராபிய வலைக்குடா |
இன வகைப்பாடு: |
ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் தெற்கு செமிடிக் |
துணைக் குழுக்கள்: |
தெற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிகளின் இடைநிலை வகைப்படுத்தலாகும். இது மேற்கு செமிடிக் மொழிகள் பெருங்குழுவின் உபபிரிவாக, செமிடிக் மொழியியளலர்களான உறோபட் ஏட்சுரோன் மற்றும் யோன் என்ர்காட் போன்றோர்கள் நோக்குகின்றனர். ஆனால் இது மேற்கு செமிடிக் மொழிகளிகளின் உபபிரிவன்று என்ற வாதமும் உண்டு. யோசேப்பு கிறீன்பேக் போன்றோர் தெற்கு செமிடிக் மொழிகளை கிழக்கு செமிடிக் மொழிகள், மேற்கு செமிடிக் மொழிகளுடன் சேர்த்து செம்டிக் மொழிகளின் மூன்றாவது பிரிவாக கொள்வர்.
தெற்கு செமிடிக் மொழிகள் இரண்டு பிரதான உப பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது அவையாவன: அராபிய வலைக்குடாவின் தென்மூலையில் காணப்பட்ட, தெற்கு அராபிய மொழிகள் மற்றும் ஆபிரிக்காவின் கொம்பு, செங்கடல்,போன்ற பகுதிகளை அண்டி காணப்பட்ட எத்தியோப்பிய செமிடிக் மொழிகள் என்பவாகும். எத்தியோபிய செமிடிக் மொழிகள் இன்று எத்தியோப்ப்பியா மற்றும் எரித்திரியா நாடுகளில் பேசப்படும் பிரதான மொழிகளாகும். தெற்கு அராபிய மொழிகள் அரபு மொழியின் தாக்கம் காரணமக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அருகிவிட்டன.
இம்மொழிகள் பேசப்பட்ட பிரதேசங்கள் குறித்து பல சர்சைகள் நிலவுகின்றது. பொதுவாக எத்தியோப்பியா, எரித்திரியா, மற்றும் அரபு வலைகுடாவின் தென்மேற்கு மூலைப்பகுதிகள் இம்மொழி பேசியவர்களின் பிரதேசமாக கருத்தப்படுகிறது.
-
செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
-
தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.