தெற்கு கூம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கு கூம்பு என்பது தென் அமெரிக்கா கண்டத்தின் தெற்கு பகுதி ஆகும். இது மகர ரேகை பகுதியை சுற்றிய தென் அமெரிக்கா நாடுகளை உள்ளடக்கியது.

தெற்கு கூம்பு
miniaturadeimagen
  தெற்கு கூம்பு பகுதிகள்
  பொதுவாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பகுதிகள்
  தெற்கு கூம்பின் சிறு பகுதி கொண்ட நாடுகள்
பரப்பளவு5,712,034 கிலோமீட்டர்கள் (3,549,293 mi)
மக்கள் தொகை135,707,204 (July 2010 est.)
அடர்த்தி27.45/km2 (71.1/sq mi)[1]
நாடுகளின் எண்ணிக்கை3, 4, or 5
மொழிகள்Spanish, Portuguese and Guarani
குடியுரிமைதென் அமெரிக்கர்கள்
Largest urban agglomerations1. பிரேசில் São Paulo
2. அர்கெந்தீனா Buenos Aires
3. சிலி Santiago
4. பிரேசில் குரிடிபே
5. பிரேசில் Porto Alegre
6. அர்கெந்தீனா Córdoba
7. உருகுவை Montevideo

பாரம்பரியமாக இப் பகுதி அர்ஜென்டீனா, சிலி மற்றும் உருகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கியது. மேற்கே பசிபிக் பெருங்கடலாலும், கிழக்கே அட்லாண்டிக் கடலாலும் சூழப்பட்டு உள்ளது. தெற்கில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையே உள்ள சந்திப்பில் அமைந்த இது அண்டார்க்டிக்காவிற்கு மிக அருகில் உள்ள கண்டப்பகுதி பகுதி ஆகும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் புவியியல் அடிப்படையில், தெற்கு கூம்பு அர்ஜென்டீனா, சிலி, உருகுவே மற்றும் சில நேரங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு (சாவ் பாலோ) பிரேசில் பகுதியையும் உள்ளடக்கியது. அதன் பரந்த வரையறையில் தெற்கு கூம்பு தெற்கு பொலிவியா மற்றும் தெற்கு பராகுவே பகுதிகளையும் உள்ளடக்கியது(பொதுவான வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றின் காரணமாக).[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. This North American density figure is based on a total land area of 4,944,081sq km
  2. Encyclopedia of world environmental history. 1142. 
  3. Steven, F. (2001). "Regional Integration and Democratic Consolidation in the Southern Cone of Latin America". Democratization (Routledge) 14: 75–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-950-738-053-2. https://books.google.com/?id=npOUfgC8qkMC&pg=PA3. பார்த்த நாள்: 12 May 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கூம்பு&oldid=2923474" இலிருந்து மீள்விக்கப்பட்டது