உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை என்றும் அழைக்கப்படும் தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை (Southern Railway Headquarters Hospital, Chennai), சென்னையின் அயனாவரத்தில் அமைந்துள்ள தெற்கு இரயில்வேயின் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இது 15 ஏக்கர்கள் (6.1 ha) பரப்பளவில் பரவியுள்ளது. இது பிரித்தானியர்கள் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை 15 அடிப்படை பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 3 பிரிவுகளில் மேம்பட்ட நிபுணத்துவம் பெற்றுள்ளது. தேசிய தேர்வு வாரிய முதுகலை பயிற்சியின் அங்கீகாரத்திற்காக மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.முதுகலை படிப்புகளில் பயிற்சி அளிப்பதற்காக ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களால் இந்த மருத்துவமனை அங்கீகாரம் பெற்றுள்ளது. இது செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.

இந்திய இரயில்வே அதன் ஊழியர்களுக்கு சேவை செய்வதற்காக இந்த மருத்துவமனை முக்கியமாக நிறுவப்பட்டது. எவ்வாறாயினும், இந்த மருத்துவமனை பொது மக்களுக்கும் குறைந்த செலவில் சேவைகளை வழங்குகிறது. இந்த மருத்துவமனை இந்திய இரயில்வேக்கு இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கான தேசிய பரிந்துரை மையமாகும்.

தற்போதைய மருத்துவமனையை மாற்ற தெற்கு இரயில்வே ஒரு புதிய மருத்துவமனையை நிர்மாணித்து வருகிறது. தற்போதுள்ள மருத்துவமனை வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.[1]

இருப்பிடம்

[தொகு]

இந்த மருத்துவமனை சென்னை, அயனாவரத்தில், சின்ன செம்பரம்பாக்கம், கான்ஸ்டபிள் சாலையில் அமைந்துள்ளது. இது பெரம்பூர் இரயில் பெட்டி நிலையம் மற்றும் பெரம்பூர் இரயில் இயந்திர நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த மருத்துவமனை பிரித்தானியர்கள் காலத்தில் நிறுவப்பட்டது. இரயில்வே ஊழியர்களின் தேவைகளுக்காக ஒரு தனி மருத்துவமனையை கட்ட வேண்டியதன் அவசியத்தை 1925 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் தெற்கு மராத்தா (எம்.எஸ்.எம்) இரயில்வேயின் தலைமை மருத்துவ அதிகாரி ஜி. ஜே. குரூசாங்க் உணர்ந்தார். 1928 ஆம் ஆண்டில், பெரம்பூரில் உள்ள எம்.எஸ்.எம் இரயில்வே ஊழியர்களுக்காக ஒரு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், 4 உதவியாளர்கள் மற்றும் 12 செவிலியர்களுடன் 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நிறுவப்பட்டது. அதன் ஆரம்ப நாட்களில், மருத்துவமனை முதன்மையாக இரயில்வே குடியேற்றத்தில் வசிப்பவர்கள் மற்றும் ரயில்வே பட்டறைகளின் ஊழியர்களின் தேவைகளுக்கு சேவை செய்தது. 1930 வாக்கில், அறுவை அரங்கம், ஊடு கதிர் மையம், ஆய்வகம் மற்றும் வெளி நோயாளி சேவைத் துறை போன்ற கூடுதல் வசதிகளைத் தவிர மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது.[2]

1957 வாக்கில், படுக்கைகளின் எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட்டது. 1958 ஆம் ஆண்டில், ஒரு ஊடு கதிர் தொகுதி நிறுவப்பட்டது. 1959 ஆம் ஆண்டில், 12 படுக்கைகள் கொண்ட மகப்பேறு பகுதி சேர்க்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில், 220 படுக்கைகள் கொண்ட ஒரு காசநோய் இணைப்பு உருவாக்கப்பட்டது, பின்னர், ஒரு இருதயவியல் மையம் திறக்கப்பட்டது. 1973 வாக்கில், ஒரு தீவிர கவனிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. விரைவில் கண், பல் மற்றும் கண்மூக்குதொண்டை போன்ற பல வெளி நோயாளி மருந்தகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. [3]

1970 களில், இந்த மருத்துவமனை இருதய நோய்களுக்கான அகில இந்திய பரிந்துரை மையமாக மாறியது. மயக்க மருந்தின் துணை சிறப்பு என இருதய மயக்க மருந்து என்ற சொல் இந்த மருத்துவமனையில் 1977 இல் மருத்துவர் கல்யாண் சிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. விரைவில், மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை துறை நாட்டின் சிறந்த இருதய அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்கும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டது . இருதய சிகிச்சையில் கவனம் செலுத்திய பெரம்பூர் மருத்துவமனையின் வழியே, நாடு முழுவதும் பல இரயில் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. அதாவது, எலும்பியல் மருத்துவர்களுக்கான மையமாக ஹவுரா, திசு மாற்று அறுவை சிகிச்சைக்கு மும்பை, மற்றும் புற்றுநோய்க்கான வாரணாசி ஆகியன்.[4]

1978 வாக்கில், இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பகுதிகளுடன் 20 படுக்கைகள் கொண்ட இரட்டை அறுவை அரங்கங்கள் நிறுவப்பட்டன. பின்னர், மருத்துவமனையில் உள்ள அனைத்து சிறப்புத் துறைகளும் செயல்பட்டு, படுக்கையின் வலிமை 505 ஆக உயர்த்தப்பட்டது. சனவரி 1980 இல், முதல் நவீன இருதய வடிகுழாய் ஆய்வகம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில், வை. என். மெக்ரோத்ரா தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்தபோது, இந்த மருத்துவமனை முதுகலை பயிற்சிக்கான தேசிய தேர்வு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், அதன் முதல் பிரதிநிதி ஜே. எஸ். என் மூர்த்தி, தெற்கு ரயில்வே மருத்துவமனைக்கும் லண்டன் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் மூன்று ஆண்டு கல்வித் திட்டமான உயர் கல்வி இணைப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். பேராசிரியர்..கிளெனிசு கவொர்த், எஸ். என். குமார் மற்றும் கர்த்தார் சிங், ஜீவன் இரத்த வங்கியின் பி.சீனிவாசன் மற்றும் இரயில்வே நிர்வாகம் ஆகியோரின் ஆதரவுடன் இந்தி நடைமுறைப்படுத்தினார்.[5]

1990 வாக்கில், டி. எஸ். ஏ, ஒளிமி அறுவை அலகு மற்றும் காணொளி மூலம் உடற்குழாய் உள்நோக்கல் போன்ற வசதிகளுடன் புதிய வடிகுழாய் ஆய்வகம் நிறுவப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு புதிய வடிகுழாய் ஆய்வகங்கள் சேர்க்கப்பட்டன.[5] 7 மார்ச் 2014 அன்று, மற்றொரு இதய வடிகுழாய் ஆய்வகம், 38.8 மில்லியன் செலவில் நிறுவப்பட்டு மருத்துவமனையின் இருதய அலகு திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரிவை இரயில்வே சுகாதார சேவைகள் இயக்குநர் பி. எஸ். பிரசாத் திறந்து வைத்தார்.[6]

2006 ஆம் ஆண்டில், தெற்கு இரயில்வே 500 மில்லியன் டாலர் செலவில் ஒரு புதிய ஒன்பது மாடி வளாகத்தை நிறுவுவதாக அறிவித்தது. தற்போதுள்ள மருத்துவமனையை மாற்றுவதற்காக 15 மில்லியன் டாலர் கணினி அடிப்படையிலான வழிசெலுத்தல் எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களுடன் அமைக்க உள்ளது.[7]

2009 ஆம் ஆண்டில், தெற்கு இரயில்வே தற்போதுள்ள வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தது.[8]

மருத்துவமனை இன்று

[தொகு]

2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, சராசரியாக, சுமார் 1,400 வெளி நோயாளிகள் தற்போதுள்ள இரயில்வே மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். நாட்டின் 16 இரயில்வே மண்டலங்களில், பெரம்பூரில் உள்ள புதிய மருத்துவமனை நோயாளிகளின் திறன் மற்றும் கிடைக்கும் வசதிகளின் அடிப்படையில் மிகப்பெரிய ரயில்வே மருத்துவமனையாக கூறப்படுகிறது. நோயாளிகளின் திறன் அடிப்படையில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள இரயில் மருத்துவமனைகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.[9]

2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த மருத்துவமனை ஆண்டுக்கு சுமார் 2,500 வடிகுழாய் ஆய்வக நடைமுறைகளையும் 1,000 இதய அறுவை சிகிச்சை முறைகளையும் செய்தது. வடிகுழாய் ஆய்வக நடைமுறைகளில் நான்கில் ஒன்று குழந்தைகளுக்கு இதயங்களில் ஏற்படும் சிக்கலான மருத்துவ கோளாறு மேம்படுத்துதல், இரத்தத் தமனிகள் மற்றும் புற இரத்தக் குழாய் சார்ந்த சிகிச்சை முறைகள் ஆகும்.[10]

புதிய மருத்துவமனை

[தொகு]

1,900 மில்லியன் செலவில் ஒரு புதிய ரயில்வே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெரம்பூரில் கட்டப்பட்டு வருகிறது. 2006-07 ஆம் ஆண்டில் இரயில்வே நிதி நிலை அறிவிப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, உண்மையான பணிகள் நவம்பர் 2007 இல் இரயில்வே பணிகளின் கீழ் தொடங்கியது.[9] இந்த மருத்துவமனை 14 ஏக்கர்கள் (5.7 ha) அளவைக் கொண்ட ஒரு வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு தனி வெளி-நோயாளி துறை தொகுதி மற்றும் 6 நோயாளி தொகுதிகள் இவற்றில் இருக்கும். இவை கட்டங்களாக கட்டப்படும். இந்த மருத்துவமனையில் 600 படுக்கைகள், 45 மருத்துவ ஆலோசனை அறைகள் மற்றும் 14 அறுவை அரங்கங்கள் (10 பொது மற்றும் 4 பிரத்யேக அறுவை அரங்கங்கள் உட்பட) இருக்கும். இந்த மருத்துவமனையில் 8 மாடிகள் மற்றும் மொத்தம் 576,000 சதுர அடி பரப்பளவு இருக்கும்.[11]

வெளி-நோயாளிகளின் தொகுதிக்கு இரண்டு தளங்கள் உள்ளன. நோயாளிகளின் தொகுதியில் ஒவ்வொரு தளமும் 6,000 சதுர அடி அளவைக் கொண்ட ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. புதிய மருத்துவமனையில் இருதயவியல், எலும்பியல், மகளிர் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் இதயம் மற்றும் மார்பு அல்லது நுரையீரல் தொடர்பான நிபுணர்களும் உள்ளனர்.[9]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
 1. "Medical college in Perambur soon". Dinamalar. http://kalvimalar.dinamalar.com/news-details.asp?cat=8&id=164. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 2. . 2 February 2014. 
 3. Madhavan, D. (2 February 2014). "Brief history of existing railway hospital at Perambur". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/brief-history-of-existing-railway-hospital-at-perambur/article5643763.ece. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 4. Menon, Shobha (16–30 April 2012). "Perambur Railway Hospital: With a focus on cardiac care". Madras Musings XXII (1). http://madrasmusings.com/Vol%2022%20No%201/with-a-focus-on-cardiac-care.html. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 5. 5.0 5.1 Menon, Shobha (16–30 April 2012). Perambur Railway Hospital: With a focus on cardiac care. http://madrasmusings.com/Vol%2022%20No%201/with-a-focus-on-cardiac-care.html. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 6. John, Ekatha Ann (7 March 2014). "Cardiac catheterization lab inaugurated at Southern Railway Headquarters Hospital in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Cardiac-catheterization-lab-inaugurated-at-Southern-Railway-Headquarters-Hospital-in-Chennai/articleshow/31622314.cms. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 7. "New complex for Perambur Hospital". The Hindu (Chennai: The Hindu). 4 February 2006 இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061209091810/http://www.hindu.com/2006/02/04/stories/2006020420660300.htm. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 8. Vydhianathan, S. (22 March 2009). "Southern Railway to set up medical college". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090326070619/http://www.hindu.com/2009/03/22/stories/2009032260590600.htm. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 9. 9.0 9.1 9.2 Madhavan, D. (2 February 2014). "New railway hospital work progresses apace". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/new-railway-hospital-work-progresses-apace/article5643756.ece. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 10. "New cath lab launched at Perambur Railway hospital". The Hindu (Chennai: The Hindu). 10 March 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-cath-lab-launched-at-perambur-railway-hospital/article5768639.ece. பார்த்த நாள்: 6 Apr 2014. 
 11. "Railway Hospital at Perambur, Chennai". crn.co.in. n.d. பார்க்கப்பட்ட நாள் 10 Apr 2014.