தெற்கு அந்தமான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெற்கு அந்தமான் மாவட்டம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்று. போர்ட் பிளேர் நகரமே இதன் தலைநகரம். இது 2980 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.

வரலாறு[தொகு]

இது 2006 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 18 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. [1]

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2,37,586 மக்கள் வாழ்கின்றனர். [2]. மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பின்படி, சதுர கி.மீட்டருக்கு 80 பேர் வசிக்கின்றனர். [2]ஆயிரம் ஆண்களுக்கு 874 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] கல்வியறிவு விகிதம் 88.49% என்ற அளவில் உள்ளது.[2]

ஓங்கே, ஜாரவா, செந்தினலர், கிரேட் அந்தமானியர் ஆகிய நான்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.

பிரிவுகள்[தொகு]

போர்ட் பிளேர், பெர்ரார்கஞ்சு, சின்ன அந்தமான் ஆகிய வட்டங்களைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், போர்ட் பிளேர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.4
(84.9)
30.2
(86.4)
31.5
(88.7)
32.5
(90.5)
31.1
(88)
29.6
(85.3)
29.2
(84.6)
29.1
(84.4)
29.1
(84.4)
29.6
(85.3)
29.7
(85.5)
29.4
(84.9)
30.03
(86.06)
தாழ் சராசரி °C (°F) 23.1
(73.6)
22.5
(72.5)
23.2
(73.8)
24.7
(76.5)
24.7
(76.5)
24.4
(75.9)
24.3
(75.7)
24.2
(75.6)
23.7
(74.7)
23.7
(74.7)
23.9
(75)
23.6
(74.5)
23.83
(74.9)
பொழிவு mm (inches) 46.4
(1.827)
26.5
(1.043)
29.3
(1.154)
69.0
(2.717)
360.4
(14.189)
501.1
(19.728)
423.7
(16.681)
425.1
(16.736)
463.0
(18.228)
300.7
(11.839)
235.0
(9.252)
154.6
(6.087)
3,034.8
(119.48)
[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இவற்றையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 11°40′12″N 92°44′24″E / 11.67000°N 92.74000°E / 11.67000; 92.74000