தெறுழ்வீ
தெறுழ் என்னும் மலர் சொல்லமைதியில் எறுழம் என்னும் மலரைப் போன்றது.
தெறுழ் மலர் மழை தொடங்கும் காலத்தில் புதர் புதராகப் பூத்துக் குலுங்கும் எனச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது.[1]
- வீ
- பூத்தபின் ஒருநாள் மட்டுமே வாழ்ந்து நிலத்தில் கொட்டிவிடும் பூக்களுக்கு 'வீ' என்று பெயர்.
- நறைநிறம்
- நறை என்பது பழங்களை நுரைக்கும்படி ஊறவைத்து இறக்கும் மணமுள்ள கள் (wine). இதன் நிறந்தான் தெறுழ் மலரின் நிறம்.
இவற்றையும் பார்க்க[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
நன்றும்
வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம், தேரலர் கொல்லோ - நற்றிணை 302