தெர்லிங்குவைட்டு
Appearance
தெர்லிங்குவைட்டு Terlinguaite | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலம் பிரீவ்சுடெர் மாகாணம் தெர்லிங்குவாவில் கிடைத்த தெர்லிங்குவைட்டு கனிமம். | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Hg2ClO |
இனங்காணல் | |
நிறம் | கந்தக-மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு |
படிக இயல்பு | வட்ட மற்றும் நீள்வட்ட படிகத்தூள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு [101] இல் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | வைர மிளிர்வு |
கீற்றுவண்ணம் | எலுமிச்சை மஞ்சள், ஆலிவ் பச்சைக்கு மாறும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 9.22 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 2.350 nβ = 2.640 nγ = 2.660 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.310 |
பலதிசை வண்ணப்படிகமை | பலமற்றது, பச்சை மற்றும் மஞ்சள் |
2V கோணம் | அளக்கப்பட்டது: 20° |
Alters to | ஒளியில் படநேரும்போது ஆலிவ் பச்சை நிறத்திற்கு மாறுகிறது. |
மேற்கோள்கள் | [1][2][3] |
தெர்லிங்குவைட்டு (Terlinguaite) என்பது Hg2ClO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் இயற்கையாகத் தோன்றும் கனிமம் ஆகும். பாதரசத்தைக் கொண்டுள்ள பிற கனிமங்கள் மழைநீர், வெப்பம் போன்ற காலநிலை மாற்றத்தால் தெர்லிங்குவைட்டு உருவாகிறது. அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் பிரீவ்சுடெர் மாகாணம் தெர்லிங்குவா மாவட்டத்தில் 1900 ஆம் ஆண்டு இக்கனிமம் கண்டறியப்பட்டது. இதனால் கனிமத்திற்கு தெர்லிங்குவைட்டு என்ற பெயரும் வைக்கப்பட்டது[4] . மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு, ஆலிவ் பச்சை நிறங்களில் தெர்லிங்குவைட்டு கானப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Hillebrand, W. F.; W. T. Schaller (1907). "Art. XXVI. "The Mercury Minerals from Terlingua, Texas: Kleinite, Terlinguaite, Eglestonite, Montroydite, Calomel, Mercury"". The American Journal of Science (139): 259–274. https://books.google.com/books?id=qRTSAAAAMAAJ&pg=PA259. பார்த்த நாள்: 2009-05-21.