தெரெக்கோல் ஆறு
| தெரெக்கோல் ஆறு Terekhol River திரக்கோல் ஆறு | |
|---|---|
தெரெக்கோல் ஆறு, இடது புறம் கோவாவும் வலது புறம் மகாராட்டிரமும் | |
![]() | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலங்கள் | கோவா (மாநிலம்), மகாராட்டிரம் |
| மாவட்டங்கள் | வடக்கு கோவா மாவட்டம், சிந்துதுர்க் கோட்டை, |
| துணை மாவட்டங்கள் | பெர்னேம், பிச்சோலிம் |
| கிராமங்கள் | திரக்கோல், குவெரிம். |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | undefined |
| • அமைவு | மகாராட்டிரம் |
| • ஆள்கூறுகள் | 15.934516, 73.861644 |
| • ஏற்றம் | 5,220 m (17,130 அடி) |
| முகத்துவாரம் | அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் |
• அமைவு | இந்தியா |
• ஆள்கூறுகள் | 15.720467, 73.690546 |
வடிநில அளவு | 435 சதுர கிலோமீட்டர்கள் (168 sq mi) |
| அகலம் | |
| • அதிகபட்சம் | 1 km (0.62 mi) |
| ஆழம் | |
| • குறைந்தபட்சம் | 0.2 m (0.66 அடி) |
| • அதிகபட்சம் | 20 m (66 அடி) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | 2 |
| • வலது | 0 |
தெரெக்கோல் ஆறு (Terekhol River) மேற்கு இந்தியாவில் பாயும் ஓர் ஆறாகும். திரக்கோல் ஆறு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மேல் பகுதிகளில் பண்டா ஆறு என்றும், கீழ் பகுதிகளில் இது திக்ரகோல் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.[1] மகாராட்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க்கு மாவட்டத்திற்கும் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திற்கும் இடையில்தெரெக்கோல் ஆறு சிறிது தூரம் எல்லையாக அமைகிறது.[2] மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மனோகர்கட்டு சுற்றுப்புறங்களில் தெரெக்கோல் ஆறு உருவாகி தென்மேற்கு திசையில் பாய்ந்து அரபிக் கடலில் சேர்கிறது.[3]
போர்த்துகீசிய காலத்தைச் சேர்ந்த திரக்கோல் கோட்டை, கோவாவின் வடமேற்கில் உள்ள தெரெக்கோல் ஆற்றின் வடக்கு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை இப்போது ஒரு பாரம்பரிய உணவு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.[4] இந்தக் கோட்டை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, சிறந்த நிலையில் பராமரிக்கப்படுகிறது. குவெரிமிலிருந்து படகு மூலம் திரக்கோல் ஆற்றைக் கடக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "तेरेखोलच्या जबड्यातून बागायती वाचवायच्या कशा? | eSakal". www.esakal.com (in மராத்தி). Retrieved 2021-03-26.
- ↑ "Rs300-cr project to protect fragile coastlines cleared in Maharashtra". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-01-25. Retrieved 2021-03-26.
- ↑ "Physical Features and Natural Resources - Relief Features and Drainage". Ratnagiri District Gazetteer. Government of Maharashtra. 1962. Retrieved 4 September 2010.
- ↑ Gokhale, Nihar. "Paradise not lost, yet". @businessline (in ஆங்கிலம்). Retrieved 2021-03-26.
