உள்ளடக்கத்துக்குச் செல்

தெரு நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் உள்ள தெரு நாய்கள்

தெரு நாய் (street dogs) அல்லது சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நாய்கள் என்பது ஒரு முற்றத்தில் அல்லது வீட்டு எல்லைகளில் மட்டுப்படுத்தப்படாது சுற்றித் திரியும் நாய்களைக் குறிப்பதாகும். உலகளாவிய நாய்களின் எண்ணிக்கை 900 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 20% வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களாகக் கருதப்படுகின்றன.

வளரும் நாடுகளில் தெரு நாய்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 62 மில்லியன் நாய்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] மேற்கத்திய நாடுகளில் தெரு நாய்கள் அரிதாகவே காணப்படுகின்றன. கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளிலும் குறைவாகவே காணப்படுகின்றன.

தோற்றம்

[தொகு]

மனிதர்களுடன் நாய்கள் வாழ்வது என்பது தொடர்ச்சியாக மாற்றம் பெறும் உறவுநிலையாகும். நாய்கள், காலப்போக்கில் ஒரு கட்டத்தில் மனிதர்களுடனான தொடர்பை இழக்க நேரிடுகிறது. இந்தத் தொடர்பிழப்பு முதலில் விலங்குகளைப் பழக்குதலின் போது ஏற்பட்டு பின்னர் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தெரு நாய்களுக்கு வழிவகுக்கும் காரணிகள்

[தொகு]

தெரு நாய்கள் என்பது உரிமையாளர் இல்லாத நாய்களாகும். தெரு நாய் என்ற சொல் சில நேரங்களில் தொலைந்த நாய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், பரவலாக யாராலும் சொந்தம் கொண்டாடப்படாத சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நாய்களைக் குறிக்கிறது. ஃபோர் பாவ்ஸ் தெரு விலங்குகளை "தெருக்களில் பிறந்த அல்லது கைவிடப்பட்டதால் வீடற்ற விலங்குகளாக ஆனவை" என்று வரையறுக்கிறது.[2] தெரு நாய்கள் பல தலைமுறைகளாக தெருக்களில் வாழ்வதும் இதற்கான காரணியாக இருக்கலாம். இத்தகைய நாய்கள் தெருக்களில் பிறக்கின்றன, யாராலும் உரிமை கொண்டாடவோ தத்தெடுக்காமலோ போகலாம் அல்லது கைவிடப்படலாம்.

உரிமையாளர்கள் பொருளாதாரச் சவால்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அந்த நாய்கள் கைவிடப்படுகின்றன.[3] சில உரிமையாளர்கள் தங்கள் வேலை செய்யும் நாய்களின் செயல்திறனில் அதிருப்தி அடைந்தால் அவற்றை கைவிடுகிறார்கள்.[4] இயற்கைப் பேரழிவுகள், ஆயுத மோதல்கள் அல்லது பிற பேரழிவுகளின் சந்தர்ப்பங்களினாலும் நாய்கள் வழிதவறிச் செல்லக்கூடும்.[5][6]

தடுக்கும் வழிமுறைகள்

[தொகு]

தமிழ்நாடு

[தொகு]

அதிகரித்துவரும் தெருநாய்களின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்காக நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாய்களைக் கருணைக் கொலை செய்வதற்காக தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அனுமதி வழங்கியுள்ளது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wallen, Joe (9 March 2023). "India has a brutal plan to deal with its stray dogs problem". The Telegraph. https://www.telegraph.co.uk/global-health/climate-and-people/indias-stray-dog-days-finally/.
  2. "FAQs about Stray Animal Care".
  3. "Understanding the Root Causes of Stray Pets: A Complex Challenge". 17 November 2023.
  4. "Up close with abandoned working dogs given second chance". ABC News. November 2015. https://www.abc.net.au/news/2015-11-02/abandoned-working-dogs-facing-euthanasia-given-a-second-chance/6894082.
  5. "What Happens to Animals During Natural Disasters? | Sierra Club".
  6. "How animals are harmed by armed conflicts and military activities". 18 March 2021.
  7. "தமிழகத்தில் நோயுற்ற தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி!". தி இந்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரு_நாய்&oldid=4337267" இலிருந்து மீள்விக்கப்பட்டது