உள்ளடக்கத்துக்குச் செல்

தெருக்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெருக்கைட்டு
Teruggite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCa4MgAs2B12O22(OH)12·12H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

தெருக்கைட்டு (Teruggite) என்பது Ca4MgAs2B12O22(OH)12·12H2O என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நிறமற்ற கனிமமான இதன் படிகங்கள் ஒற்றைச்சரிவச்சு பட்டகங்களாக உள்ளன. படிகத்தில் ஒளிபுகும் தன்மை கொண்டுள்ளது. கதிரியக்கத்தன்மை கொண்டதல்ல. கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டுள்ளது. தெருக்கைட்டின் கடினத்தன்மை மோவின் அளவுகோலில் 2.5 என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக எரிமலை வெப்ப நீரூற்றுகளில் காணப்படுகிறது. அர்கெந்தீனா நாட்டைச் சேர்ந்த தேசிய பல்கலைக்கழகத்தில் வண்டல் மற்றும் பாறையியல் பேராசிரியர் மரியோ இ.தெருக்கியின் நினைவாக கனிமத்திற்கு தெருக்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெருக்கைட்டு கனிமத்தை Tgg[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெருக்கைட்டு&oldid=4191354" இலிருந்து மீள்விக்கப்பட்டது