தெரிக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெரிக்சைட்டு
Derriksite
மாலகைட்டின் மீது தாமிரம்-யுரேனியம்-செலீனைடு தெரிக்சைட்டு
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுCu4(UO2)(SeO3)2(OH)6•H2O
இனங்காணல்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்பு{???} மிகச்சரி, {010} நன்று
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி4.72

தெரிக்சைட்டு (Derriksite) என்பது Cu4(UO2)(SeO3)2(OH)6•H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது மிகவும் அபூர்வமான ஒரு யுரேனியம் கனிமம் ஆகும். தாமிரம், யுரேனியம், செலீனியம் ஆகிய தனிமங்களைக் கொண்டுள்ள இரண்டாம் நிலை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. அடர் பச்சை நிறம் முதல் வெளிர் பச்சை நிறம் வரையிலான வண்ணங்களில் ஒது காணப்படுகிறது. பொதுவாக தெரிக்சைட்டு படிகங்கள் ஊசி வடிவப் படிகங்களாகத் தோன்றுகின்றன. யூரேனைல் செலீனியக் கனிமமான தெமசுமேக்கரைட்டு கனிமத்துடன் தெரிக்சைட்டு பெரும்பாலும் சேர்ந்து காணப்படுகிறது. ஆனால் தெரிக்சைட்டு கனிமம் தெமசுமேக்கரைட்டு கனிமத்தைக்காட்டிலும் மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது ஆகும்.

நிலவியலாளர் யீன் மேரி பிராங்கோயிசு யோசப் தெரிக்சு (1912-1992) கண்டு பிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. மோவின் அளவு கோலில் தெரிக்சைட்டின் கடினத் தன்மை 2 ஆகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Derriksite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் January 11, 2013.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரிக்சைட்டு&oldid=2753584" இலிருந்து மீள்விக்கப்பட்டது