தெரசா தீவு
| உள்ளூர் பெயர்: உலுரூ | |
|---|---|
| புவியியல் | |
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 8°16′N 93°08′E / 8.27°N 93.13°E |
| தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மொத்தத் தீவுகள் | 1 |
| முக்கிய தீவுகள் |
|
| பரப்பளவு | 86.5 km2 (33.4 sq mi) |
| நீளம் | 5.3 km (3.29 mi) |
| அகலம் | 19.6 km (12.18 mi) |
| கரையோரம் | 52.8 km (32.81 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 250 m (820 ft) |
| நிர்வாகம் | |
| District | நிகோபார் |
| தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
| இந்தியாவின் நிர்வாக அலகுகள் | நான்கோவ்ரி துணைக்கோட்டம் |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 1934 |
| அடர்த்தி | 22.35 /km2 (57.89 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744301 |
| தொலைபேசிக் குறியீடு | 03192 |
| ஐ.எசு. ஓ குறியீடு | ஐ.என்-ஏ என்-00[1] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
தெரசா தீவு (Teressa Island) இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் ஒன்றாகும். தரசா தீவு என்ற பெயராலும் இத்தீவு அழைக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]டென்மார்க் தனது உரிமையை கைவிட்டுவிட்டது என்ற அனுமானத்தின் பேரில் ஆத்திரியா நிகோபார் தீவுகளை ஒரு காலனியாகக் கோரியபோது (1778-1784), அவர்கள் தெரசா தீவுக்கு ஆத்திரியாவின் இளவரசி மரியா தெரேசியாவின் பெயரைச் சூட்டினர். ஆத்திரியா 1784-ஆம் ஆண்டில் தனது உரிமையைக் கைவிட்டது.[2]
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து, தெரசா தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
புவியியல்
[தொகு]தெரசா தீவு, அருகிலுள்ள கமோர்டா தீவுக்கு மேற்கிலும், கச்சல் தீவுக்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது. சோவ்ரா தீவு எனப்படும் சிறிய தீவு வடக்கிலும், போம்புகா தீவு கிழக்கிலும் அமைந்துள்ளன. இந்தத் தீவின் வடக்குப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு 87 மீட்டர் உயரம் வரை உயர்ந்து காணப்படுகிறது.
தெரசா தீவின் பரப்பளவு 101.26 சதுர கிலோமீட்டர் ஆகும்.
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெரசா தீவின் மக்கள் தொகை 1,934 ஆக இருந்தது. அங்குள்ள மிகப்பெரிய குடியிருப்புப் பகுதிகள்: பெங்காலி (354), கலாசி (335), மற்றும் மின்யுக் (305) ஆகியனவாகும்.[3]
நிர்வாகம்
[தொகு]தெரசா தீவு நான்கோவுரி நகரத்தின் தெரசா-சோவ்ரா தாலுகாவைச் சேர்ந்ததாகும்.[4]
சோவ்ரா தீவு, போம்புகா தீவு, தில்லாங்சோங்கு தீவு மற்றும் லாவுக்கு தீவு ஆகியவை தெரசா-சோவ்ரா தாலுகாவில் உள்ள மற்ற தீவுகளாகும்.
படக்காட்சியகம்
[தொகு]சஃபேத்து பாலு கடற்கரை சஃபேத்து பாலு கடற்கரை (வெள்ளை மணல் கடற்கரை) போம்புகா தீவுக்கு எதிரே கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
- வரைபடம்
- வான் பார்வை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ Franz Theodor Maurer, Die Nikobaren: Colonial-Geschichte und Beschreibung nebst motivirtem Vorschlage zur Colonisation dieser Inseln durch Preussen, Berlin: Heymann, 1867, S. 119
- ↑ "Minyuk Pincode 744303". Retrieved 2023-03-19.
- ↑ Tehsils