தெம்மினிக் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்மினிக் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
பிரிவு: முதுகெலும்பிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையூரிடே
பேரினம்: பெட்டினோமிசு
இனம்: பெ. செட்டோசசு
இருசொற் பெயரீடு
பெ. செட்டோசசு
தெம்மினிக், 1844
தெம்மினிக் பறக்கும் அணில் பரம்பல்

தெம்மினிக் பறக்கும் அணில் (Temminck's flying squirrel)(பெட்டினோமிசு செட்டோசசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

இந்த சிறிய பறக்கும் அணில் இதன் வரம்பின் வடக்கே வறண்ட இலையுதிர் அல்லது பருவமழை மலைக் காடுகளிலும், தெற்கில் ஈரமான, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை, தாழ் நில மற்றும் மலைக்காடுகளிலும் வாழ்கிறது. இது ரப்பர் தோட்டங்களிலிருந்தும் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடத்தை[தொகு]

மற்ற பறக்கும் அணில்களைப் போலவே, இந்த சிற்றினம் இரவு நேர மற்றும் மரங்களில் வாழும் தன்மையுடையது. உணவாகப் பழங்கள் மற்றும் விதைகளை உண்ணும். இது தரைக்கு அருகில் உள்ள மரக்குழிகளில் கூடு கட்டுவதாக அறியப்படுகிறது.[2]

உடல் தோற்றம்[தொகு]

இதன் உடல் நீளம் 11.6 செ.மீ. வரையும், வாலின் நீளம் 10.4 செ.மீ. வரை வளரக்கூடியது. இதனுடைய எடை 40 கிராம் வரை இருக்கும். உரோமங்கள் மேலே சாம்பல் நிறத்திலிருந்து கருப்பு கலந்த பழுப்பு நிறமாகவும், கீழே வெள்ளை நிறத்தில் இருக்கும். இருப்பினும் இந்த இன உயிரிகளிடையே உரோம நிறத்தில் சில வேறுபாடுகள் காணப்படுகிறது. வால் அடிப்பகுதியில் தட்டையாக உள்ளது.

நிலை[தொகு]

வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு தாய்லாந்து, தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியா, சுமத்ரா மற்றும் வடக்கு போர்னியோ (சபா, புருனே, சரவாக் மற்றும் வடகிழக்கு கலிமந்தான்) ஆகிய பகுதிகளில் தெம்மினிக் பறக்கும் அணில் தனித்தனி குழுக்களாகக் காணப்படுகிறது. காடுகளின் இழப்பு இந்த சிற்றினத்தின் வரம்பில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Clayton, E. (2016). "Petinomys setosus". IUCN Red List of Threatened Species 2016: e.T16739A22241609. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T16739A22241609.en. https://www.iucnredlist.org/species/16739/22241609. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thorington Jr., R. W., Koprowski, J. L., Steele, M. A., Whatton, J. F. 2012. Squirrels of the World. Johns Hopkins University Press, Baltimore.
  3. Phillipps Q. & Phillipps K. (2016). Phillipps’ Field Guide to the Mammals of Borneo and Their Ecology: Sabah, Sarawak, Brunei, and Kalimantan. Second Edition. John Beaufoy Publishing. 400 pp.
  4. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.