தெம்னே மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெம்னே
KʌThemnɛ
நாடு(கள்) சியேரா லியோனி
பிராந்தியம் நடு சியேரா லியோனி
இனம் தெம்னே
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.2 மில்லியன்  (2006)[1]
நைகர்-கொங்கோ
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சியேரா லியோனி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 tem
ISO 639-3 tem
மொழிக் குறிப்பு timn1235[2]

தெம்னே மொழி அல்லது திம்னே எனப்படும் மொழி, சியேரா லியோனி நாட்டில் வாழும் 20 இலட்சம் மக்களால், முதல் மொழியாகப் பேசப்படுகின்றது. இவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 30% ஆகும். இவர்களைவிட, இவர்கள் வாழும் பகுதிகளை அண்டி வாழும் மேலும் 15 இலட்சம் பிற மொழியினரும் இம் மொழியைப் பொது மொழியாகப் பேசுகிறார்கள். இது இதன் அயல் மொழிகளுள் ஒன்றான கிசி மொழிக்கு மிக நெருக்கமான உறவுடையது.

இம்மொழி கினியாவில் பேசப்படும் பாகா மொழிகளுடனும், சியேரா லியோனியில் பேசப்படும் செர்புரோ மொழியுடனும் உறவுடையது. தெம்னே பேசுபவர்கள் சியேரா லியோனியின் வடக்கு மாகாணத்திலும், மேற்குப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனினும், இவர்களைச் சியேரா லியோனியின் 12 மாவட்டங்களிலும் காணமுடியும். கினியா, கம்பியா போன்ற பிற மேற்காப்பிரிக்க நாடுகளிலும் தெம்னே மக்கள் வாழ்கின்றனர். தெம்னேக்கள் கல்வி, தொழில் வாய்ப்புக்களை நாடி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி, வணிகம், வேளாண்மை, மீன்பிடி போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ளனர். இவர்களிற் பெரும்பாலானோர் முசுலிம்கள்.

ஒலிகள்[தொகு]

தெம்னே நான்கு தொனிகளைக் கொண்ட ஒரு தொனி மொழி.

மேற்கோள்கள்[தொகு]

  1. தெம்னே at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Timne". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/timn1235. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்னே_மொழி&oldid=2157623" இருந்து மீள்விக்கப்பட்டது