உள்ளடக்கத்துக்குச் செல்

தெமூர் குய்போகரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமூர் குய்போகரோவ்
Temur Kuybokarov
Kuybokarov in 2023
நாடுஉசுபெக்கிசுத்தான் (2018 வரை)
ஆத்திரேலியா (2018 முதல்)
பிறப்புசூலை 22, 2000 (2000-07-22) (அகவை 25)
தாசுகந்து, உசுபெக்கிசுத்தான்
பட்டம்பேராதன் (2019)
பிடே தரவுகோள்2576 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2600 (திசம்பர் 2023)

தெமூர் குய்போகரோவ் (Temur Kuybokarov) என்பவர் உசுபெக்கிசுத்தான்- ஆத்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 ஆம் தேதியன்று உசுபெக்கிசுத்தானில் இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.[1] 2018 ஆம் ஆண்டு வரை உசுபெக்கிசுத்தான் நாட்டிலும் அதன் பின்னர் ஆத்திரேலியாவிலும் வாழ்ந்து வருகிறார். 18 வயதில் மேற்கு ஆத்திரேலியாவிலிருந்து முதல் கிராண்ட்மாசுட்டராகத் தகுதி பெற்றார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். 2018 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவுக்குச் செல்லும் வரை உசுபெக்கிசுத்தான் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

சீனாவின் பீகிங்கில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் வெற்றியாளர் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்திற்கான சமநிலையில் முடித்தார்.[3] சமநிலை முறிவு ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 11 வயதில், கியூபோகரோவ் (அப்போது இகோனின்) உலக சாம்பியனான விசுவநாதன் ஆனந்தை ஒரே நேரத்தில் நடந்த கண்காட்சி போட்டியில் தோற்கடித்தார். இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற சாதனையாகும்.[4][5]

2016 ஆம் ஆண்டில், தனது குடும்பத்தினருடன் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு மேற்கு ஆத்திரேலியாவின் பெர்த்து நகரில் வசிக்கத் தொடங்கினார். இதே ஆண்டு திசம்பரில், குய்போகரோவ் 8ஆவது பினாங்கு திறந்த நிலை போட்டியை வென்றார்.[6][7] தனது தேசிய கூட்டமைப்பை 2018 ஆம் ஆண்டில் உசுபெக்கிசுதானில் இருந்து ஆத்திரேலியாவிற்கு மாற்றினார்.[8] 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியை வென்றார்.[9][10][11] கிராண்டுமாசுட்டர் பட்டத்திற்குத் தேவையான விதிமுறைகளை 2017 ஆத்திரேலிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டி; 2017 ஏரோஃப்ளோட்டு திறந்தநிலை வெற்றியாளர் போட்டி மற்றும் 2018 ஆம் ஆண்டு கோல்ட் கோசுட்டு திறந்தநிலை வெற்றியாளர் போட்டி ஆகிய போட்டிகளில் முடித்தார். 2018 அபுதாபி மாசுட்டர்கள் போட்டியில் நான்காவது விதிமுறையையும் இவர் முடித்தார்.[12]

2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் குய்போகரோவ் மேற்கு ஆத்திரேலியாவின் 50 வளரும் வீரர்கள் பட்டியலில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[13] திசம்பரில் குய்போகரோவ் மெல்போர்னில் நடந்த 2019 ஆத்திரேலிய மாசுட்டர்கள் போட்டியில் கிராண்டுமாசுட்டர் விதிமுறையை 8½/9 புள்ளிகளுடன் வென்றார்.[14] அடுத்த மாதம் குய்போகரோவ் சிட்னியில் நடந்த ஆத்திரேலிய வெற்றியாளர் போட்டியை வென்றார். 135 ஆண்டுகால இந்த நிகழ்வின் வரலாற்றில் பட்டத்தை வென்ற முதல் மேற்கு ஆத்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[15][16] 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாட்வியாவின் ரிகாவில் நடந்த பிடே கிராண்டு சுவிசு போட்டியில் குய்போகரோவ் 5.5/11 என்ற கணக்கில் புள்ளிகள் பெற்று, துருக்கியில் நடந்த மெர்சின் திறந்த நிலை போட்டியை 7.5/9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குய்போகரோவ் முதல் முறையாக பெர்த் திறந்தநிலை போட்டியை வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of titles approved by the 2019 1st quarter PB in Astana, Kazakhstan". FIDE. 2019-03-11. Retrieved 2019-03-25.
  2. GM title application (PDF). FIDE.
  3. "ASIAN YOUTH INVITATIONAL CHESS CHAMPIONSHIPS U10 2010". chess-results.com.
  4. Begmatov, Jamshid (2011-04-07). "Clash of the Titans: Kasimdzhanov-Anand rapid chess match". ChessBase. Retrieved 2020-11-04.
  5. Dylan Loeb McClain (2011-04-16). "For World Champion, Two Uncommon Losses". The New York Times
  6. "8th Penang Heritage City International Chess Open 2016". chess-results.com.
  7. Crowther, Mark (2016-12-12). "TWIC 1153: 8th Penang Open 2016". The Week in Chess. Retrieved 2020-11-03.
  8. Player transfers in 2018 பரணிடப்பட்டது 20 சனவரி 2018 at the வந்தவழி இயந்திரம். FIDE.
  9. "Temur Kuybokarov of Uzbekistan wins 2017 Australian Open Chess Championship". The Tashkent Times. 2017-01-13. http://www.tashkenttimes.uz/sports/420-temur-kuybokarov-of-uzbekistan-wins-2017-australian-open-chess-championship. 
  10. "2017 Australian Open Championship". www.newzealandchess.co.nz. Archived from the original on 3 June 2019. Retrieved 23 May 2019.
  11. "2019 Australian Open". www.boxhillchess.org.au. Archived from the original on 12 February 2021. Retrieved 11 July 2019.
  12. Title Applications. 1st quarter PB 2019, 4-6 March, Astana, KAZ. FIDE. Retrieved 2019-06-07
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  14. "2019 Australasian Masters GM Norm Tournament". newzealandchess.nz.
  15. Fischer, Johannes (2020-01-17). "19-year-old wins 2020 Australian Championship". Chess News. ChessBase. Retrieved 2020-11-03.
  16. "Honour Boards | Australian Chess Federation Inc".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமூர்_குய்போகரோவ்&oldid=4410852" இலிருந்து மீள்விக்கப்பட்டது